எரிபொருள், உரப் பாதுகாப்பில் மோடி அரசு தோல்வி! மல்லிகார்ஜுன கார்கே கடும் விமர்சனம்

1 Min Read

புதுடில்லி, ஏப்.24  இந்தியாவுக்கான எரிபொருள், உரப் பாதுகாப்பை உறுதி செய்வதில் மோடி அரசு இரட்டைத் தோல்வி அடைந்துள்ளது என்றும், தனது தோல்விகளை ‘தொகுதி மறுவரை யறை நாடகங்கள்’ மூலம் திசைதிருப்ப முயல்கிறது என காங்கிரஸ் தலைவர் மல்லி கார்ஜுன கார்கே குற்றம் சாட்டி னார்.

டில்லியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் ஒன்றிய அமைச்சர் முரளி மனோகர் ஜோஷி, இந்தியா இனி விஷ்வகுரு அல்ல என்றும், இந்தப் பதத்தைப் பயன்படுத்தக்கூடாது. சமஸ்கிருதத்தை இந்தியாவின் அலுவல் மொழியாக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே நேற்று (23.4.2026) ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிடுகையில், ’மோடி அரசு தனது தோல்விகளையும், எப்ஸ்டீன் மீதான கடுமையான குற்றச்சாட்டுகளையும் தொகுதி எல்லை நிர்ணய நாடகங்கள் மூலம் திசை திருப்ப முயன்றது. ஆனால், இந்தியா அந்த நாடகத்தைக் கண்டுகொண்டது. தேசத்திற்கான எரிபொருள் மற்றும் உரப் பாதுகாப்பை உறுதி செய்வதில் பா.ஜ.க. இரட்டை தோல்வி பெற்றுள்ளது. எரிபொருள் இறக்குமதி பல்வகைப்படுத்தல் தோல்வியடைந்துள்ளது.

ஹார்முஸ் நீரிணைப்பில் உள்ள நமது கப்பல்களால் பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள முடியவில்லை. இந்தியக் கொடி ஏற்றப்பட்ட 14 கப்பல்கள் கடந்த 54 நாட்களாக அங்கு சிக்கியுள்ளன. மோடி அரசின் செயல்பாடுகளினால், 2025-2026 இல் இந்தியாவின் கச்சா எண்ணெய் உற்பத்தி தொடர்ந்து 11 ஆவது ஆண்டாக சரிந்து வருகிறது. 2014-2015 இல் இருந்து ஒட்டு மொத்த கச்சா எண்ணெய் உற்பத்தி கிட்டத்தட்ட 22% சரிந்துள்ளது. எனவே இந்தியா இனி விஷ்வகுரு அல்ல என்று சொன்ன அவரது கட்சியைச் சேர்ந்த ஜோஷியின் கருத்தை மோடி ஏற்று கொள்ள வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *