கருநாடகா, ஏப்.20 பெங்களூருவில் நடை பெற்ற 22ஆவது மாநில அளவிலான நீதித்துறை அதிகாரிகள் மாநாட்டில் உச்ச நீதிமன்ற நீதிபதி பி.வி. நாகரத்னா கலந்துகொண்டு உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது, ‘‘மாவட்ட நீதிபதிகளின் ஊதிய மற்றும் படிகளை அதிகரிப் பதற்கான 2ஆவது தேசிய நீதித்துறை ஊதியக் குழுவின் பரிந்துரைகளை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது.
ஊதியம் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ள நிலை யிலும், ஒரு நீதிபதி தனது வருமான வரம்பிற்குள் வாழ முடியாமல் பேராசை மற்றும் ஆசை வார்த்தைகளுக்குப் பலி யானால், அத்தகையவர் களை நீதித்துறை அமைப் பிலிருந்து உடனடியாக வெளியேற்ற வேண்டும்.
நீதிபதிகள் எந்தவித மான வெளிப்புற அழுத்தங்களுக்கும் பணியக் கூடாது. இந்த அழுத்தம் சில நேரங்களில் சக ஊழியர்களிடமிருந்தே வரலாம்,அதற்கும் இடம் கொடுக்கக் கூடாது.
தீர்ப்பு வழங்கும் போது சமரசம் செய்துகொள்வது நீதித்துறைக்கே ஒரு கரும்புள்ளியாக அமை யும். தைரியமாகவும் சுதந் திரமாகவும் முடிவுகளை எடுக்க வேண்டும்.
மாவட்ட நீதிபதிகளுக் குப் பாதுகாப்பும் ஆதர வும் வழங்குவது உயர் நீதிமன்றங்களின் கடமை யாகும். பதவி உயர்வு, பணியிட மாற்றம் போன்றவற் றில் வெளிப் படைத் தன்மை இருக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
இந்த மாநாட்டில் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்யகாந்த், கருநாடக முதலமைச்சர் சித்தராமையா மற்றும் நீதிபதிகள் அரவிந்த் குமார், விபு பக்ரு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

