நன்கொடைகள்

1 Min Read

தாராபுரம் கழக மாவட்டம் மடத்துக்குளம் ஒன்றியம் கணியூர் தோழர்  ச.ஆறுமுகம் (மாவட்டத் துணைத் தலைவர்) பெரியார் உலகத்திற்கு இம்மாதத்துக்கான ரூ.1000 வங்கிக் கணக்கில் செலுத்தியுள்ளார். நன்றி.

– – – – –

திராவிடர் கழக காப்பாளர் சுயமரியாதைச் சுடரொளி மு.துக்காராம் 5 ஆம் நினைவு நாளை முன்னிட்டு நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு குடும்பத்தினர் ரூ1000 வழங்கினர். என்றும் நீங்கா நினைவுகளுடன் கல்யாணி துக்காராம் மற்றும் மகன்கள், மகள்கள், மருமகன், மருமகள்,பேரன், பேத்திகள்.

 

மும்பை பெரியார் பாலா, தமிழர் தலைவரை சந்தித்து ரூ.10,000 கழக வளர்ச்சி நிதியாக வழங்கினார்.

நன்கொடை

மும்பை திராவிடர் கழகத் தலைவர் பெ. கணேசனின் தந்தையார்  பூ.பெரியசாமி அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு  நாளில் (20/04/2026) திருச்சி அன்னை நாகம்மையார் குழந்தைகள் இல்லத்துக்கு ரூ:1000 வழங்கப்படுகிறது .

நன்கொடை

பெரியார் பெருந்தொண்டர் சுயமரியாதைச் சுடரொளி மானமிகு கருஞ்சட்டைகாரர் தி.இரா.இரத்தினசாமி  பிறந்த நாளையொட்டி (20.04.2026) திருச்சி சாமி கைவல்யம் முதியோர் இல்லத்திற்கு ரூ.2500 மற்றும் நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.2500 நன்கொடை வழங்கப்பட்டது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *