ஒகேனக்கல்
கழகப் பொறுப்பாளர்களுக்கு வேண்டுகோள்
பேரன்புடையீர் வணக்கம்.
2026 ஏப்ரல் 25, 26 சனி, ஞாயிறு ஆகிய இரண்டு நாட்கள் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் தந்தை பெரியார் மன்றத்தில் திராவிடர் கழகம் சார்பில் பெரியாரியல் பயிற்சிப்பட்டறை மிக சிறப்புடன் நடைபெறவுள்ளது.
திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மற்றும் பெரியார் பேருரையாளர்கள், பேராசிரியர்கள் பங்கேற்று வகுப்பு எடுக்க உள்ளார்கள்.
தருமபுரி, அரூர், கிருஷ்ணகிரி, ஓசூர், திருப்பத்தூர், சேலம், மேட்டூர், ஆத்தூர், நாமக்கல், திருச்செங்கோடு கழக மாவட்டங்களின் சார்பில் தலா 10 மாணவர்களை பெரியாரியல் பயிற்சிப் பட்டறையில் பங்கேற்க முன்பதிவு செய்திட கனிவுடன் வேண்டுகிறோம்.
இவண்
இரா.ஜெயக்குமார்
மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்
பெரியாரியல் பயிற்சிப் பட்டறை, பொறுப்பாளர்
7550058743, 9842598743
