ஒன்றிய அமைச்சர்கள் பணம் கொண்டு வருகின்றனர் ஆனால் எங்களது வாகனம் குறி வைக்கப்படுகிறது! மம்தா குற்றச்சாட்டு

1 Min Read

கொல்கத்தா, ஏப்.16- திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் வாகனங்கள் மட்டும் குறிவைத்து சோதனை நடத்தப்படுவதாக மம்தா குற்றம் சாட்டியுள்ளார். மேற்கு வங்கத்தில் இரண்டு கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. முதற்கட்ட தேர்தல் வருகிற 23ஆம் தேதியும், 2ஆம் கட்ட தேர்தல் வருகிற 29ஆம் தேதியும் நடக்கிறது.

“மேற்கு வங்கத்தில் எங்களை தோற்கடிக்க பாஜக, மத்திய படைகளை பயன்படுத்துகிறது. தேர்தல் ஆணயைம் பாஜக-வுக்கு துணை போகிறது” என தொடர்ந்து குற்றச்சாட்டு முன்வைத்து வருகிறார் திரிணாமுல் காங்கிரஸ். இந்த நிலையில் அபிஷேக் உள்ளிட்ட திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் வாகனங்கள் மத்திய படைகளால் வேண்டுமென்றே சோதனைக்குள்ளாகி வருவதாக மம்தா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மம்தா கூறியதாவது:-

நான் இன்று கொல்கத்தா விமான நிலையத்திற்கு சென்று கொண்டிருக்கும்போது, மத்திய படைகள் என்னுடைய காரை மறித்து பரிசோதனை செய்ய முயன்றனர். உங்களுக்கு துணிச்சல் இருந்தால் ஒவ்வொரு நாளும் என்னுடைய காரை சோதனை செய்யுங்கள் பார்ப்போம்.

அதேபோல் அபிஷேக் காரை மட்டுமே குறிவைத்து தேர்தல் அதிகாரிகள் அறிவுறுத்தலால், தேர்தல் பணிக்காக வந்துள்ள பாதுகாப்புப்படையினர் சோதனை நடத்துகின்றன என்று மம்தா குற்றம்சாட்டியிருந்தார். மற்றவர்களை விடுகின்ற நிலையில், இந்த தலைவர்கள் மட்டும் குறிவைக்கப்படுவது ஏன்?. இது தேர்ந்தெடுக்கப்பட்ட தாக்குதல் என்பது தெளிவாக தெரிகிறது. ஒன்றிய அமைச்சர்கள் பணத்தை கொண்டு வருகிறார்கள். நிதி அமைச்சர் கார்டுகளை வநியோகம் செய்கிறார். தேர்தல் ஆணையம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மம்தா தெரிவித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *