கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 15.4.2026

2 Min Read

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

*நிதிஷ் குமாரிடம் இருந்து தட்டிப் பறித்து முதலமைச்சர் பதவியை கைப்பற்றியது பாஜக. பீகாரில் முதல் முறை பாஜக ஆட்சி: சாம்ராட் சவுத்ரி இன்று முதலமைச்சராக பதவியேற்கிறார்

* அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி – இது தான் தமிழ்நாடு – மு.க.ஸ்டாலின் பேட்டி

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* 33 % மகளிர் இட ஒதுக்கீட்டுக்காக மக்களவையின் பலத்தை 850 ஆக உயர்த்தும் மசோதா நாடாளு மன்றத்தில் நாளை தாக்கல்

* ஒருமித்த கருத்து இல்லாமல் தொகுதி மறுசீரமைப்பு கூடாது, தென் மாநிலங்கள் கூட்டணி அமைத்திட தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் வேண்டுகோள்.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* தொகுதி மறுவரையறை செய்வதற்கான அரசியல மைப்பு திருத்தச் சட்ட வரைவு மசோதா நகல் வெளியானது. தொகுதி மறுவரையறை காரணமாக மக்களவை தொகுதி எண்ணிக்கை 543இல் இருந்து 850ஆக அதிகரிக்கிறது. தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டின் மக்களவை தொகுதிகள் 39இல் இருந்து 59ஆக உயருகிறது. உத்தரப் பிரதேச மாநிலத்தில் மக்களவை தொகுதி எண்ணிக்கை 80லிருந்து 120ஆக உயர உள்ளது.

* எங்களின் மோசமான அச்சங்கள் உண்மையாகி விட்டன: தெற்கு மாநிலங்களின் அதிகாரத்தை பறிக்க என்.டி.ஏ. அரசு தொகுதி மறுவரையறையை பயன்படுத்துகிறது, ஜான் பிரிட்டாஸ் விமர்சனம்.

* ஒடிசா உண்டுறை பள்ளியில் ‘பழைய உணவை’ சாப்பிட்ட 150 குழந்தைகள் உடல்நலம் பாதிப்பு; 5ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் உயிரிழப்பு. பள்ளி நிர்வாகத்தின் மீது கவனக்குறைவு குற்றச்சாட்டை முன்வைத்துள்ள பெற்றோர்கள், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

*எதிர்க்கட்சிகள் கூட்டம்: பெண்களுக்கான இட ஒதுக்கீடு சட்டம் மற்றும் தொகுதி மறுவரையறை குறித்த நாடாளுமன்ற அமர்வுக்கு முன், எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்திற்கு கார்கே தலைமை தாங்குகிறார்

தி இந்து:

* ஜாதிவாரி கணக்கெடுப்பை தவிர்ப்பதற்காகவே, பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவை அரசு அவசரப்படுத்தியுள்ளது – அகிலேஷ் குற்றச்சாட்டு

டைம்ஸ் ஆப் இந்தியா:

* 2025  நீட் பி.ஜி. தகுதி மதிப்பெண் குறைக்கப்பட்டதன் மூலம், மருத்துவ படிப்பில், நிகர்நிலைப் பல்கலைக்கழ கங்கள் ரூ. 2,000 கோடி வருவாய் கல்லா கட்டியுள்ளன.

தி டெலிகிராப்:

*தமிழ்நாட்டில் ஸ்டாலினுக்காக அரவிந்த் கெஜ்ரிவால் பிரச்சாரம்.

– குடந்தை கருணா

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *