வெட்டிக்காடு பெரியார் மெட்ரிகுலேஷன் பள்ளி தேர்தல் விழிப்புணர்வு அணிவகுப்பு

1 Min Read

வெட்டிக்காடு, ஏப்.12– நமது வெட்டிக்காடு பெரியார் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்கள்  4  முதல் 9ஆம் வகுப்பு வரை அரசின் வேண்டுகோளுக்கிணங்க தேர்தல் விழிப்புணர்வு அணிவகுப்பானது பள்ளிக்கு அருகாமையில் உள்ள திருவோணம் மற்றும் ஊரணிபுரம் சாலைகளில் நடத்தப்பட்டது. பல்வேறு விளம்பர பலகைகளுடன் முழக்கங்கள் எழுப்பிய வண்ணம் அணிவகுப்பு நடத்தினர் . பொதுமக்கள் அனைவரும் நின்று கவனித்து பள்ளியின் பெயரை அறிந்து கொண்டது மட்டுமல்லாமல் மாணவர்களுக்கு உற்சாகமூட்டினர். பள்ளி ஆசிரிய பெருமக்கள், முதல்வர் மற்றும் சிலம்பம் ஆசிரியர் உட்பட பங்கு பெற்று அணிவகுப்பை சிறப்பித்தனர்.

பெரியார் கல்வி நிறுவனங்கள்

விளம்பர பலகையின் வாசகங்கள்

Your vote your voice ,  Vote for Honesty not for Sale ,  Your Vote Shapes the Nation.  Your Duty -Your Vote Don’t Miss It.

100 சதவீதம் வாக்களிப்பு, உங்கள் ஓட்டு விற்பனைக்கு அல்ல,  வாக்களிப்பு நமது பொறுப்பு, வாக்களிக்க தவறாதீர், உங்கள் வாக்கு உங்கள் உரிமை.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *