கடவுள் பிசினஸ்

1 Min Read

பிச்சையா அல்லது கொள்ளையா?

தலைநகர் டில்லியில் காளி வேடமிட்டவர்கள் கையில் கத்தியை வைத்துகொண்டு சில்லரைகளைத் தரும் கடைக்காரர்களை மிரட்டி 100 ரூபாய் அல்லது 200 ரூபாய் கொடு என்று மிரட்டுகிறார்கள்.

கட்டுரை, ஞாயிறு மலர்

காவல் துறையினரிடம் புகார் கூறினால், “கொடுத்து தொலைய வேண்டியதுதானே! ஏன் அவர்களிடம் பிரச்சினை செய்கிறாய்?” என்கிறார்கள்.

கங்கைக்கு பால் அர்ப்பணம்!

வாரணாசியில் கங்கைக்கு அர்ப்பணம் என்ற பெயரில் குறைந்த பட்சம் 5 லிட்டர் அதிக பட்சம் 100 லிட்டர் பாலை ஊற்றுவார்கள்

அப்படி வாரணாசியில் உள்ள அரிச்சந்திர காட் என்ற பகுதியில் ஆற்றில் பாலை ஊற்றும் போது “கொஞ்சம் சட்டியில் ஊற்றுங்க” என்று கெஞ்சும் பிள்ளைகளை விரட்டும் கொடூரம் நடக்கும்.

கட்டுரை, ஞாயிறு மலர்

மச்சவதாரமா?

பொதுவாக வட இந்தியாவில் ஆற்றுமீன்களை உயிரோடு சட்டி பானை மற்றும் பிளாஸ்டிக் தட்டில் வைத்து விற்பனைக்கு கொண்டு வருவார்கள். உயிருள்ள மீன்கள் என்றால்தான் பெரும்பாலானோர் வாங்குவார்கள்.

இந்த நிலையில் சத்தீஷ்கர் மாநிலத்தில் நடந்த ஒரு கோயில் திருவிழாவில் விற்பனைக்காக உயிருள்ள மீனை வைத்திருந்துள்ளார்கள். ஆனால், கோயிலுக்கு வந்த மூடர்கள் சிலர் அதையும் சாமி என்று நினைத்து சில்லரைகளைப் போட்டுள்ளனர்.  மீன் கடைக்காரர் பார்த்தார் நல்ல பிசினஸா இருக்கே என்று கூறி இரண்டு மீன்களைக் கொண்டுவந்து பிளாஸ்டிக் தட்டில் தண்ணீர் ஊற்றி தட்டுக்கு சந்தனக் குங்குமப் பொட்டு வைத்தார்.

மச்சவதாரக் கோயில் ரெடி!  வருமானமும் குவிகிறது!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *