திராவிடர் பண்பாட்டு விழாவாம் பொங்கலைக் கொண்டாடுவீர்!

4 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

பொங்கல் என்பது திராவிடரின் உழைப்புத் திருநாள்!
உழைப்பைச் சிறுமைப்படுத்துவது ஆரியர்களின் தீபாவளி!

பொங்கல் விழா என்பது திராவிடர்களின் உழைப்புத் திருவிழா – தீபாவளி என்பது உழைப்பைச் சிறுமைப்படுத்தும் – உயிர்க்கொலை புரியும் ஆரியர்களின் பண்டிகை! அறிவுத் திருவிழாவாம் – திராவிடர் பண்பாட்டின் அடையாளமான பொங்கல் திருநாள் விழாவைக் கொண்டாடுவீர்  என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

உழவர்களின்
உவகைத் திருவிழா!

பொங்கல் – திராவிடர்களின் அறுவடைத் திருநாள் – உழவர்களின் உவகைத் திருவிழா!

தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம். ‘‘மார்கழி உச்சியில் மலர்ந்தது பொங்கல்’’ என்ற புரட்சிக்கவிஞரின் கவிதை வரிகள், அறிவியல் அடிப்படையையும் கொண்டது!

இந்த விழாவைப் பின்னுக்குத் தள்ளி, ஆரியர் சூழ்ச்சியால் திராவிட அரசர்களைக் கொன்றதை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட ‘தீபாவளி’யை – தங்களிடம் உள்ள பிரச்சார பலத்தால் அதை உலகப் பண்டிகையாக்குதலில் ஆர்.எஸ்.எஸ். முக்கிய கடமையாற்றுகிறது!

பண்பாட்டுச் சீரழிவுக்கு புராணத்தை வரலாறுபோல் சித்தரித்து, நமது இயற்கையோடு இணைந்த விழாவைக்கூட, ‘சங்கராந்தி’ ‘சூரியக் கடவுள் வழிபாடு’ என்று திரிபுவாதத்தைத் திணிப்பதில், சங்கராச்சாரியார்கள் முதல் ஆரி யத்தின் கடைகோடி முகவர் உள்பட முழு மூச்சுடன் இறங்கியுள்ளனர்!

ஜி.எஸ்.டி.யால், வரி விகிதக் குறைப்பை நிதியமைச்சரை விட்டு அறிவிப்பதைக்கூட ‘தீபாவளி’ நாள் பரிசு என்றே கூறி, ‘ஒரு கல்லில் இரண்டு மாங்காய்’ என்று அவர்கள் மகிழ்கி றார்கள்.

‘மதச்சார்பின்மை’ என்ற அரசியலமைப்புச் சட்டக் கோட்பாட்டினை ஒழிப்பது, சூரிய பகவான் வழிபாடு என்று மூட நம்பிக்கையை மக்களின் மூளைக்குள் திணிப்பது – இரண்டும் ஒரு சேர!

ஆடு, மாடு ஓட்டி வந்த ஆரியர்களுக்கு வேளாண்மை தெரியாது என்பது மட்டுமல்ல; அதனை வெறுத்தும், பழித்தும் கூறும் வாடிக்கை அதனுடையது. ஆதாரம் இதோ படியுங்கள்!

‘‘இந்து மதம் எங்கே போகிறது?’’

‘‘தங்களது பெண்களை வழியில் விட்டுவிட்டு வந்த ஆரியர்கள், மனுதர்மத்தைக் கையோடு கொண்டு வந்து, இங்குள்ள மக்களிடம் அதனை வேதக் கட்டளையாகப் பரப்பினர்’’ என்கிறார் – ‘‘இந்து மதம் எங்கே போகிறது?’’ என்ற புத்தகத்தை எழுதிய அக்னிேஹாத்திரம் இராமானுஜ தத்தாச்சாரியார்.

அந்த மனுதர்மமே மேற்சொன்ன கருத்துக்குச் சான்று.

விவசாயம் – வேளாண்மை பாபகரமான தொழிலாம் – பூமியைப் பிளக்கிறதாம்! என்னே அறியாமை! எவ்வளவு மடமை!

அப்படிப்பட்ட உழவர் விழாவை சிறு மைப்படுத்தி – பிறர் உழைப்பால் உயரும், வாழும் ஆரியம் – விதைக்காது விளையும் கழனியல்லவா!

எனவே, ‘தீபாவளி’ ஆரியப் பண்டிகை மட்டுமல்ல, உயிர்களையும் பறிக்கலாம் என்னும் கொலைகளை அடிப்படையாகக் கொண்ட – நம்ப முடியாத ‘பண்டிகை!’

இயற்கையை ஒட்டிய
அறுவடைத் திருவிழா!

பொங்கல் விழாவோ – இயற்கை – நில வளம் – நீர்வளம் – உழைப்பு வளம் என்ற இயற்கையை ஒட்டிய அறுவடைத் திருவிழா!

இந்தப் பொங்கல் – வேளாண்மை விழா என்பது முழுக்க முழுக்க திராவிடர் திருவிழா. காரணம், திராவிடர்களின் முக்கிய தொழில் வேளாண்மையல்லவா?

பகுத்தறிவிற்கு ஒத்த விழா!

மூலையில் தள்ளி வைத்த இந்த மதச் சார்பற்ற, ஜாதிகளில் சாயாத, மூடநம்பிக்கை இல்லாத ஒரு திருவிழாவை திராவிடர் பண்பாட்டுத் திருவிழாவாகக் கொண்டாடி மகிழ்வது – பகுத்தறிவிற்கு ஒத்த விழா என்பதை – தந்தை பெரியார் – திராவிடர் இயக்கம் மீட்டு சிறப்புப் பீடத்தில் நிறுத்தினார் சுமார் 80 ஆண்டுகளுக்கு முன்.

திராவிட இயக்கம், மக்கள் மகிழ்ச்சியில் திளைக்கும் மகத்தான திருவிழாவாக, எவ்வித வேறுபாடும் இல்லாது, மகிழ்வுப் பகிர்வு விழாவாக மக்கள் கொண்டாடப் பரப்புரை செய்து, தனி வெளிச்சத்தைப் பாய்ச்சியது!

அந்த மீள் முயற்சியே – பண்பாட்டுப் பரப்பு தலும், பாதுகாத்தலும் இன்று நமது ஒப்பற்ற முதலமைச்சர் தலைமையில், ‘திராவிட மாடல்’ ஆட்சியில்!

‘‘சமத்துவப் பொங்கல்’ உவகை பொங்க, உள்ளங்கள் மகிழ்ந்து குலாவ, குவலயம் எங்கும் கொண்டாடப்படுவது திராவிடத்தின் தனிப்பெரும் சாதனை சரித்திரம் என்பதை எவரே மறுக்க முடியும்?

இதனை நம் புரட்சிக்கவிஞர்,

‘‘மனுவின் மொழி அறமான தொரு நாள்!

அதனை மாற்றியமைக்கும் நாளே

தமிழர் திருநாள்’’ என்றார்!

அதை நோக்கியதே நமது லட்சியப் பயணம்!!

திராவிடமும், தமிழரும் வெவ்வேறு அல்ல– விதாண்டாவாதப் பார்வையும், பேச்சும் கவைக்கு தவா!

இனமானப் பேராசிரியர் விளக்கியதுபோல,

‘‘தமிழர்’’ என்னும் போது பெருமை பெறுகிறோம்!

‘‘திராவிடர்’’ எனும்போது உரிமை பெறுகி றோம்!!

எனவே, ‘திராவிடம்’ நமது மொழி உரிமை தாண்டிய பண்பாட்டு மீட்டுருவாக்குதல்!

முன்பே திராவிடர் இயக்கம் கண்டெடுத்த, அன்றைய ஹரப்பா, மொகஞ்சதாரோ, இன்றைய – கீழடிப் புதையல்!

அறிவுத் திருவிழாக்களை கொண்டாடுங்கள்!

எனவே, விழாக்களைத் தக்கபடி அடையாளம் கண்டு – அறிவுத் திருவிழாக்களை கொண்டா டுங்கள்!

புராணக் குப்பை மேட்டில் கட்டாயப் பொய்களின் உலாவைத் தடுத்து நிறுத்துவோம்!

இனி, அதுவே என்றும் நம் பணி!

கி.வீரமணி

தலைவர்,
  திராவிடர் கழகம்

 

சென்னை
14.1.2026

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *