ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பாக உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக தமிழ்நாடு அரசு மறு ஆய்வு மனு மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்கம் வரவேற்பு

3 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

சென்னை, செப். 13- மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்கத்தின் மாநில துணைப் பொதுச்செயலாளர் அ. ரகமத்துல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஆசிரியர் தகுதி தேர்வு குறித்து உச்ச நீதிமன்றம் செப்டம்பர் 1 2025 அன்று அளித்துள்ள தீர்ப்பின் படி பணியில் உள்ள ஆசிரியர்கள் பதவி உயர்வு பெறுவதற்கு ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி பெற வேண்டும் எனவும், 23/07/2011க்கு பிறகு பதவி உயர்வு பெற்ற ஆசிரியர்கள் இரண்டு ஆண்டுக்குள் தகுதி தேர்வில் தேர்ச்சி அடைய வேண்டுமெனவும் , உச்சநீதிமன்றம் தீர்ப்பு அண்மையில் வழங்கியிருந்தது.

கட்டாய கல்வி
உரிமைச் சட்டம்

கட்டாய கல்வி உரிமைச் சட்டம் அமல்படுத்துவதற்கு முன்பு ஆசிரியர் பணியில் சேர்ந்தவர்கள் முறையான கல்வித் தகுதியுடன் தான் ஆசிரியர் பணியில் தேர்ந் தெடுக்கப்பட்டுள்ளனர். அப்படி இருக்கையில் முன் தேதியிட்டு அவர்கள் அனைவரும் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதினால் தான் பதவி உயர்வு வழங்கப்படும் என அறிவித்துள்ளது ஆசிரியர் மத்தியில் மிகுந்த அச்சத்தையும், பதற்றத்தையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியிருந்தது.

திராவிட மாடல்

உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வந்ததி லிருந்து வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொண்ட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், திராவிட மாடல் ஆட்சியில் இருக்கும் வரை எந்த ஒரு ஆசிரியர்களும் பாதிக்கப்பட மாட்டார்கள் என்பதை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வாயிலாக அனைவருக்கும் தெரிவித்தனர்.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களும் தீர்ப்பு வந்ததிலிருந்து ஆசிரியர்கள் பக்கம் முழுமையாக நின்று அவர்களின் பிரச்சினையை தீர்க்கும் விதமாகவும், அவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாகவும் தொடர்ந்து நம்பிக்கையுடன் பேசி வந்தனர்.

கல்வித்தரம் மற்றும் ஆசிரியர் களுக்கு உரிய நீதி ஆகிய இரண் டையும் உறுதி செய்வதில் தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளது.

பணி பாதுகாப்பு
மற்றும் உரிமை

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் அனைத்து ஆசிரியர் சங்கங்களையும் அழைத்து அவர் களின் கருத்துக்களையும் கேட்டறிந்து  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றதன் விளைவாக மறு ஆய்வு மனு பணியில் உள்ள ஆசிரியர்களின் பணி பாதுகாப்பு மற்றும் உரிமை களை பாதுகாக்கும் வகையில் சமநிலையை நிலை நிறுத்துவதோடு எதிர்கால நியமனங்களுக்கு டெட் தேர்வை கட்டாயமாக கடைப் பிடிக்கும் நோக்கத்தோடு தாக்கல் செய்யப்படுகிறது.

விரைவில் ஆசிரியர் நலன் சார்ந்து உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசால் மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்படும் என அறிவிப்பு வெளியிட்டதற்கு மாற்றுத்திறனாளி முன்னேற்ற சங்கத்தின் சார்பில் வரவேற்கிறோம்.

ஆசிரியர்களுக்கு பிரச்சினை என்றால் முதலில் குரல் கொடுக்கக் கூடியது திராவிட மாடல் அரசு என்பதை அனைத்து ஆசிரியர்களும் நன்கு உணர்ந்துள்ளனர். கலைஞரின் வழித்தோன்றுதல் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் திராவிட மாடல் அரசு ஆசிரியர் சமூகத்துடன் உறுதியாக நிற்கிறது என்ற நம்பிக்கை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. ஆசிரியர்களின் நலன்கள் காக்கப்பட்டு ஒவ்வொரு குழந்தைக்கும் தரமான கல்வி தரும் உரிமையை பாதுகாத்திடும் வகையில் நியாயமான மற்றும் முழுமையான தீர்வுகளை பெரும் வகையில்

ஆசிரியர்களின் உரிமையை பாது காக்க மிகத் தீவிரமாக செயல்பட்டு வருவதற்கு மாற்றுத்திறனாளி முன்னேற்ற சங்கத்தின் சார்பில் நெஞ்சம் நிறைந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

முறையான கல்வித் தகுதியோடு ஆசிரியர் பணியில் இடம்பெற்றுள்ள மாற்றுத்திறனாளி ஆசிரியர்களுக்கு கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தில் விலக்கு அளிக்கலாம் என ஏற்கெனவே சட்டத்தில் உள்ளதை கருத்தில் கொண்டு அனைத்து பணியில் உள்ள மாற்றுத்திறனாளி ஆசிரியர்களுக்கும் பதவி உயர்வு பெறுவதற்கு தகுதி தேர்வில் இருந்து விலக்களிக்க வேண்டும் என மாற்றுத் திறனாளி முன்னேற்ற சங்கத்தின் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களையும், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களையும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களையும் உரிமையோடு கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *