ராணிப்பேட்டை, ஆக. 15- கடந்த 1.8.2025 வெள்ளிக்கிழமை முதல் 5.8.2025 செவ்வாய்க்கிழமை வரை செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகரில் திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெறும் சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு நிறைவு விழா ஒரு நாள் மாநில மாநாட்டிற்கு மக்களை அணிதிரண்டு வரவும், மாநாட்டின் நோக்கத்தை எடுத்து கூறவும் ராணிப்பேட்டை மாவட்டம் முழுக்க அய்ந்து நாட்களில் குறிப்பாக காவேரிப்பாக்கம், வாலாஜாபேட்டை ராணிப்பேட்டை பொன்னை, அரக்கோணம் பகுதிகளில், பொம்மலாட்ட கலைஞர் கலைவாணனின் கலை அறப்பேரவை குழுவின் “15” நிமிட பொம்மலாட்டம் கலை நிகழ்ச்சி பகுத்தறிவு கலைப்பிரிவு மாநில தலைவர் மு.கலைவாணன் இயக்கத்தில் ஒரு நாளைக்கு 5 இடங்கள் வீதம் அய்ந்து நாட்களில் 25 இடங்களில் மக்கள் வியந்து பாராட்டும்படி, ஆடல், பாடல், மூலம் கலைநிகழ்ச்சி சிறப்பாக அமைந்தது.
25 இடங்களிலும் தலைமைச் செயற்குழு உறுப்பினர் பு.எல்லப்பன், மாவட்ட தலைவர் சு.லோகநாதன் ஆகியோர் முன்னின்று நிகழ்வை ஒழுங்குபடுத்தினர்.அந்தந்த பகுதிகளில் தி.மு.க. பொறுப்பாளர்களின் பங்களிப்பு குறிப்பிடதக்கது. அந்தந்த பகுதிகளில் பங்கேற்ற நம் இயக்க தோழர்கள் மாநில ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், மாவட்ட செயலாளர் செ.கோபி, மாவட்ட து.தலைவர் பொன்.வெங்கடேசன், மாவட்ட து.செயலாளர் க.சு.பெரியார்நேசன், மாவட்ட ப.க.தலைவர் த.க.பா.புகழேந்தி, மாவட்ட ப.க.செயலாளர் ந.இராமு, மாவட்ட ப.க.து.தலைவர் போ.பாண்டுரங்கன், தோழர் பெ.ராஜேந்திரன், இரா.தமிழ்வாணன், சிப்காட் ராஜா சார், வி.சி.க.பொறுப்பாளர் சேகர், பாண்டியன், பொன்னை தி.மு.க. பொறுப்பாளர்கள் துரை.வெற்றிச் செல்வன், மயூரநாதன், மாவட்ட காப்பாளர் சொ.ஜீவன்தாஸ், பொதுக்குழு உறுப்பினர் கோ.சூரியகுமார், அரக்கோணம் நகர தி.மு.க.செயலாளர் வி.எல்.ஜோதி அவர்கள், டி.கே.இராமன், கவுன்சிலர் ந.சிட்டிபாபு, K.கோவிந்தராஜ், ராஜேந்திரபாபு, சவுந்தர், ஓய்வுபெற்ற நல்லாசிரியர் சு.பாண்டியன், பாபு, சிட்டிபாபு, தருமன், ம.தி.மு.க.ஆறுமுகம், சீனிவாசன், மற்றும் ஏராளமானோர் பங்கேற்று 25 நிகழ்ச்சிகளையும் சிறக்க வைத்தனர்.