பொத்தனூர், மே 25- நாமக்கல் மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் 16.5.2025 அன்று காலை 11 மணி அளவில் பொத்தனூர் பெரியார் படிப்பகத்தில் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத் தலைவர் பொத்தனூர் க.சண்முகம் தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் திருச்செங்கோடு வருகை பற்றியும் நிகழ்வை சிறப்பாக நடத்துவது பற்றியும் இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
தலைமைக் கழக ஒருங்கிணைப் பாளர் ஊமை.ஜெயராமன், மாநில பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் வழக்குரைஞர் ப.இளங்கோ ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியர் கலந்து கொள்ளும் நிகழ்வை மிக சிறப்பான முறையில் நடத்துவோம் என தோழர்களை உற்சாகப்படுத்தும் வகையில் பேசினார்கள்.
மாவட்டத் தலைவர் குமார், மாவட்டச் செயலாளர் வழக் குரைஞர் பெரியசாமி, பொதுக்குழு உறுப்பினர் க.பொன்னுசாமி, மாவட்ட ப.க. தலைவர் வீர.முருகன் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.
சேலம் மாவட்ட தலைவர் வீரமணிராஜு, மேட்டூர் மாவட்ட தலைவர் கா.நா.பாலு, ஆத்தூர் மாவட்ட தலைவர் அ.சுரேஷ், மாவட்ட இளைஞரணி தலைவர் ஆனந்தகுமார், திருச்செங்கோடு நகரத் தலைவர் மோகன், குமார பாளையம் நகர தலைவர் சு.சரவ ணன், மாவட்ட ப.க. துணை தலை வர் அறிவாயுதம், ப.க. தோழர் ராஜசேகர், திருச்செங்கோடு நகர இளைஞரணித் தலைவர் நந்தகுமார், திருச்செங்கோடு இளைஞரணி செயலாளர் பாரதிராஜா ஆகியோர் இக்கூட்டத்தில் பங்கேற்று கழக ஆக்கப் பணிகள் பற்றி உரையாடினர்.
தீர்மானங்கள்
தமிழர் தலைவர் ஆசிரியர் கலந்து கொள்ளும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா நிகழ்வை மிகச் சிறப்பாக நடத்துவது எனவும், அனுமதி கொடுத்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்வதெனவும் தீர்மானிக்கப்பட்டது
திருச்செங்கோட்டில் நடைபெற்ற அய்ம்பெரும் விழாவை மிகச் சிறப்பாக நடத்துவதற்கு ஒத்துழைப்புக் கொடுத்த திமுக மேனாள் மேற்கு மாவட்ட செயலாளர் மதுரா செந்தில், அந்நிகழ்வில் பங்கு கொண்ட இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்களுக்கும் மற்றும் திராவிடர் கழக மாநில மாவட்ட பொறுப்பாளர்களுக்கும், அந்த நிகழ்வு மிகச் சிறப்பாக நடைபெற ஒத்துழைப்பு கொடுத்த திருச்செங்கோடு கழகப் பொறுப்பாளர்களுக்கும், தோழர்களுக்கும் மனமார்ந்த நன்றியை இக்கூட்டம் தெரிவித்துக் கொள்கிறது.