உலக புத்தக மற்றும் பதிப்புரிமை நாளை முன்னிட்டு புத்தக நன்கொடை வழங்கும் விழா

Viduthalai
2 Min Read

பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்)

வல்லம், ஏப். 21- பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் அர்ஜுன் சிங் நூலகமும், கல்வியியல் துறையும் இணைந்து உலக புத்தக மற்றும் பதிப்புரிமை தினத்தை கொண்டாடியது. விழாவினை முன்னிட்டு புத்தக நன்கொடை வழங்கும் நிகழ்வு 15.04.2025 அன்று காலை 10 மணிக்கு மொழி வாழ்த்துடன் இனிதே துவங்கியது.

விழாவில் கல்வியியல் துறை மாணவி செல்வி ஜி.திவ்யா வரவேற்புரை ஆற்றினார். பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் முனைவர் வெ. ராமச்சந்திரன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி புத்தக நன்கொடை இயக்கத்தை தொடக்கி வைத்தார். துணை வேந்தர் தனது உரையில் பல் கலைக்கழக வேந்தர் டாக்டர் கி.வீரமணி அவர்களின் படிப் பறிவினை பற்றியும், இன்றளவும் அவருடைய வாசிப்பு மற்றும் கற்றல் ஆர்வம் பற்றியும், ஓய்வறியா உழைப்பினைப் பற்றியும், வாசிப்பின் வாயிலாக ஆசிரியர் அவர்களுக்கு கிடைக்கப் பெற்றுள்ள அறிவாற்றலையும், தொலைநோக்குப் பார்வை பற்றியும் சிறப்பாக எடுத்துரைத் தார்கள்.

பெரியார் கல்வி நிறுவனங்கள்

அதன் பின்னர் புத்தக வாசிப்பு உறுதிமொழியினை மாணவ மாணவிகள் ஆசிரியர்கள் எடுத்துக் கொண்டனர். நிகழ்ச்சியில் நன்கொடையாக வழங்கப்பட்ட புத்தகங்களை இணை துணை வேந்தர் முனைவர் ஆர். மல்லிகா, பதிவாளர்  முனைவர் பி.கே.சிறீவித்யா, அறிவியல் மற்றும் மானுடவியல் புல முதன்மையர் முனைவர் பி.விஜயலட்சுமி, நூலக இயக்குநர் முனைவர் த. நர்மதா, கல்வியியல் துறை தலைவர் பேராசிரியர் முனைவர் ஜி.தமிழ்வாணன் ஆகியோரின் முன்னிலையில் பெறப்பட்டது.

நிகழ்ச்சியின் நிறைவாக கல்வியியல் முதலாம் ஆண்டு மாணவி செல்வி எம்.பிரியதர்ஷினி நன்றி உரையாற்றினார்.

புத்தகம் நன்கொடை

புத்தகம் நன்கொடை வழங்கும் நிகழ்வானது 15.04.2025 தொடங்கி 30.4.2025 வரை தொடர்ந்து நடைபெறும். இந்த புத்தகங்கள் அரசுப் பள்ளி நூலகங்களுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. மாணவர்கள் புத்தகம் படிக்கும் பழக்கத்தை ஊக்கப்படுத்தவும் புத்தக வாசிப்பின் அவசியத்தை உணர்த்தும் வகையிலும் இந் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

விழா ஏற்பாடுகளை அர்ஜுன் சிங் நூலக பணியாளர்களும் கல் வியியல் துறை பணியாளர்களும் செய்திருந்தனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *