முகலாய மன்னரான அவுரங்கசீப் கல்லறையை இடிப்பவர்களுக்கு
ரூ. 21 லட்சம் பரிசு வழங்கப்படும் என உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஹிந்து அமைப்பு அறிவித்துள்ளது.
மகாராட்டிர முதலமைச்சரும் பாஜக தலைவருமான தேவேந்திர பட்னாவிஸ், அவுரங்கசீப் கல்லறையை அகற்றுவதற்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருந்த நிலையில், ஹிந்து அமைப்பு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த கிருஷ்ண ஜென்மபூமி சங்கர்ஷ் நியாஸ் அமைப்பின் தலைவரான தினேஷ் ஃபல்ஹரி காட்சிப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் பேசியுள்ளதாவது:
‘‘முகலாய மன்னரான அவுரங்கசீப் ஹிந்து கோயில்களை இடித்துள்ளார். ஹிந்து மதத்தைச் சேர்ந்த பெண்களை கொடுமைப்படுத்த அனுமதித்துள்ளார். மராத்திய போர் வீரர்கள் மீது அநாகரிக செயல்களை கட்டவிழ்த்துள்ளார். அண்மையில் திரைப்படத்தில் இவற்றைக் கண்டு அதிர்ச்சி அடைந்தேன்.
அவரின் கல்லறை இந்தியாவில் என்ன காரணத்துக்காக இருக்கிறது? அவரின் கல்லறை இங்கிருந்து அகற்றப்பட வேண்டும். இந்தியாவின் வேறு எந்தப் பகுதியிலும் அவரின் கல்லறை இருக்கக் கூடாது. அவுரங்கசீப் கல்லறையை இடித்து அகற்றுபவர்களுக்கு கிருஷ்ண ஜென்மபூமி சங்கர்ஷ் நியாஸ் சார்பில் ரூ. 21 லட்சம் பரிசாக வழங்கப்படும். அவரின் கல்லறையை நாட்டில் வேறு எங்கும் வைக்க நாங்கள் அனுமதிக்கமாட்டோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
அவுரங்கசீப் கல்லறையை இடிப்பவர்களுக்கு ரூ. 21 லட்சம் பரிசாம்!
Leave a Comment