தமிழ்நாட்டிற்கான கல்வி நிதிப் பங்கீட்டைத் தர மறுத்து, தேசியக் கல்விக் கொள்கையையும் மும்மொழிக் கொள்கையையும் தமிழ்நாட்டு மாணவர்கள் மீது திணிக்கத் துடிக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசைக் கண்டித்து, விழுப்புரம் சட்டக் கல்லூரி மாணவர்கள் தன்னெழுச்சியாக போராட்டம் நடத்தினர். இதில் விழுப்புரம் சட்டக் கல்லூரி மாணவர்கள் இளமாறன், ரகுநாத், கவின், அஜய், சூர்யா, சஞ்சய், கனியமுதன், தசரதன், சுந்தரவேல், கோகுல் உள்ளிட்ட 20கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். (18.2.2025)