சர்ச்சையில் சிக்கிய மராட்டிய ஆளுநர் பதவி விலக விருப்பம்
மும்பை, ஜன. 24- ஆளுநர் பொறுப்பில் இருந்து தம்மை விடுவிக்கக் கோரி மகாராட்டிரா ஆளுநர் பகத்சிங் கோசியாரி பிரதமரிடம் வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.கடந்த 19ஆம் தேதி மும்பை வந்த போது பிரதமர் மோடியிடம் மகாராட்டிரா ஆளுநராக இருக் கக் கூடிய பகத்சிங்…
ஆளுநர் மாளிகையின் மரியாதை?
மும்பை, ஜன.24- மகாராஷ்டிரா மாநில துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னவிஸ் மனைவியான அம்ருதா பட்னவிஸ் தனது ஆண் நண்பருடன் அரசு மாளிகையில் ஆடிக்கொண்டு இருந்த விவகாரம் பெரும் புயலைக் கிளப்ப, எதிர்க் கட்சியான தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆளுநரின் பணி என்ன…
‘நீட்’ தேர்வு விலக்கு: ஒரு வாரத்தில் ஒன்றிய அரசுக்கு அறிக்கை அனுப்பப்படும் அமைச்சர் ரகுபதி தகவல்
புதுக்கோட்டை, ஜன. 24- நீட்’ தேர்வு விலக்கு தொடர்பான மசோதா குறித்த விளக்கம் ஒரு வார காலத் தில் ஒன்றிய அரசுக்கு அனுப்பப் படும் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறினார். புதுக்கோட்டையில் சட்டத் துறை அமைச்சர் ரகுபதி நேற்று (23.1.2023) செய்தியாளர்களுக்கு…
புறம்போக்கு நிலங்களை மக்களுக்கு வழங்கும் நடைமுறை
சென்னை, ஜன. 24- தமிழ்நாட்டில் அரசு புறம்போக்கு நிலங்களை தகுதியான பயனாளிகளுக்கு வழங் கும் நடைமுறை தொடர்பாக, ஆந்திர அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் குழுவினர், தமிழ் நாடு வருவாய்த்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.இது தொடர்பாக வருவாய்த்…
ஈரோடு இடைத் தேர்தலில் போட்டியிட பி.ஜே.பி. அச்சம்: அ.தி.மு.க.தான் போட்டியிடும் – அண்ணாமலை பேட்டி
சென்னை, ஜன. 24- ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணியை எதிர்த்து நிற்கக் கூடிய பலம் வாய்ந்த கட்சி அ.தி.மு.க.தான் என்று பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலைப் பொறுத்த வரை எங்கள் கூட்டணி சார்பில்…
தஞ்சையில் 21.1.2023 அன்று நடைபெற்ற திராவிட மாணவர் கழக கலந்துரையாடலில் பங்கேற்ற பல்வேறு மாவட்ட மாணவர்கள் தமிழர் தலைவருடன்….
முனைவர் சாமிநாதன், அவரது இணையர் இருவரும் உடற்கொடை உறுதியளிப்புச் சான்றிதழை தமிழர் தலைவரிடம் வழங்கி விடுதலை சந்தா வழங்கினார். அவருக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்தார். படம் 2: மேடையில் உணர்ச்சிமிகு உரையாற்றிய உரத்தநாட்டைச் சேர்ந்த பெரியார் பிஞ்சு மேகன் மற்றும்…
என்.எல்.சி.க்கு நிலம் கொடுத்தவர்களில் 10 பேருக்கு பணி நியமன ஆணை: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வழங்கினார்
சிதம்பரம், ஜன. 24- என்.எல்.சி.க்கு நிலம் கொடுத்தவர்களில் 10 பேருக்கு பணி நியமன ஆணையை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வழங்கினார். கடலூர்நெய்வேலி என்.எல்.சி. இந்தியா நிறுவனத்திற்கு நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக கரிவெட்டி, கத்தாழை ஆகிய கிராமங்களை சேர்ந்த நில உரிமையாளர்கள், விவசாயிகள், விவசாய சங்க…
ஒரு குழந்தைக்கு மேல் பெற்றால் பெண் ஊழியர்களுக்கு பல்வேறு சலுகைகள் சிக்கிம் அரசு அறிவிப்பு
காங்டாக்,ஜன.24- ஒரு குழந்தைக்கு மேல் பெற்றுக் கொள்ளும் அரசு பெண் ஊழியர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்படும் என்று சிக்கிம் மாநில அரசு அறிவித் துள்ளது.நாட்டின் மக்கள்தொகை 140 கோடியை தாண்டிச் சென்றுள்ள நிலையில். உலக அளவில் மக்கள்தொகையில் 2ஆவது இடத்தில் இந்தியா…
‘பெரியார் லைஃப்’ உயிர் காக்கும் பணி – செயலியை தமிழர் தலைவர் ஆசிரியர் தொடங்கி வைத்தார்
தக்க சமயத்தில் உடல் உறுப்புகள் கிடைக்காமல் போவதால் ஆண்டு தோறும் ஏறத்தாழ அய்ந்து லட்சம் உயிரிழப்புகள் ஏற்படுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.உறுப்புக்கொடை வழங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரித்தால் பத்து முதல் இருபது சதவிகித உயிர்கள் காப்பாற்றப்படலாம். நூறு கோடிக்கு மேல் ஜனத்தொகை உள்ள…
பாலியல் புகாரில் பாஜக மேனாள் நிர்வாகி கைது
திருச்சி, ஜன. 24- திருச்சி கோட்டை கீழ ஆண்டார் வீதி பிடாரி அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் வினோத் (வயது 27). பாஜக மாநகர் மாவட்ட இளைஞரணி மேனாள் செயலாளராக இருந்த இவருக்கு, பிளஸ் 2 படிக்கும் ஒரு மாணவியுடன் இன்ஸ்டாகிராம்…