சடையார்கோயில் நாராயணசாமி அவர்களின் மைத்துனர் மறைவு – கழகத் தலைவர் ஆறுதல்
சடையார்கோயில் பெரியார் கோலாட்டக் குழு நிறுவனர் நாராயணசாமி அவர்களின் மைத்துனர் மணிவண்ணன் (வயது 54) இன்று (17.3.2024) மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். கழக தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மானமிகு நாராயணசாமி அவர்களுக்கு தொலைபேசி மூலம் ஆறுதல் கூறினார்.
நன்கொடை
பெரியார் நூலக வாசகர் வட்ட வாழ்நாள் உறுப்பினர் தி.சு.தேவேந்திரன் இணையர் தே.விசயகுமாரி அவர்களின் 6ஆம் ஆண்டு நினைவு நாளை (17.3.2024) முன்னிட்டு நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.400 நன்கொடை வழங்கப்பட்டது. நன்றி! - - - - - சிவகாசி மாநகர…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
17.3.2024 டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: ♦ எதிர்பார்க்கப்பட்ட மக்களவைக்கு 22 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் முதல் கட்டமாக வரும் ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு தொடங்குகிறது. இறுதிக் கட்ட தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வாக்குப்பதிவு முடிந்ததும், ஜூன் 4ஆம்…
பெரியார் விடுக்கும் வினா! (1269)
போலீஸ் உத்தியோகங்களைத் தாழ்த்தப்பட்டவர் களுக்கே கொடுக்க வேண்டும். அவர்களை அக்கிரகாரத்தில் குடியிருக்கச் செய்ய வேண்டும். தீண்டாமை பாராட்டாத சிறந்த கிராமங்களுக்குப் பரிசளிக்க வேண்டும். தாழ்த்தப் பட்டவர்களுக்கென்று தனியாகச் சேரி கட்டி அங்கே அவர்கள் குடியேறுவதை முற்றிலுமாக மாற்ற வேண்டும். எக்காரணத்தின் பொருட்டாவது…
உரத்தநாடு வடக்கு ஒன்றியம் சேதுராயன் குடிக்காடு கிராமத்தில் இந்தியா கூட்டணி வெல்ல வேண்டும் ஏன்? தெருமுனைக் கூட்டம்
உரத்தநாடு, மார்ச் 17- உரத்தநாடு வடக்கு ஒன்றிய திராவிடர் கழகத்தின் சார்பில் சேதுராயன் குடிக்காடு கிராமத்தில் 13.3.2024 புதன் அன்று மாலை 6 மணி அளவில் இந்தியா கூட்டணி வெல்ல வேண்டும் ஏன்? என்ற தலைப்பில் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் சேதுராயன் குடிக்காடு…
அன்னை மணியம்மையார் பிறந்த நாள் விழா
ஆண்டிப்பட்டி, மார்ச் 17- தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஒன்றியம் ஆண்டிப்பட்டியில் தொண்டறத் தாய் அன்னை மணியம்மையார் 105ஆவது பிறந்தநாள் விழா! கழகக் கொடியேற்று விழா 10.3.2024 அன்று மாலை அய்ந்து மணிக்கு மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் த.வீரன் தலை மையில் சிறப்பாக…
முனைவர் துரை.சந்திரசேகரன் எழுதியுள்ள “மனித உரிமைக் காவலர் தந்தை பெரியார்” மற்றும் நிலவு பூ.கணேசன் நூற்றாண்டு மலர்
முனைவர் துரை.சந்திரசேகரன் எழுதியுள்ள “மனித உரிமைக் காவலர் தந்தை பெரியார்” மற்றும் நிலவு பூ.கணேசன் நூற்றாண்டு மலர் நாள்: 19.3.2024 - செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி முதல் 8 மணி வரை இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல்,…
ஆதரவற்ற முதியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்
சென்னை, மார்ச் 17- சென்னையில் டாக்டர் கே.சூர்யா கல்வி மற்றும் மருத்துவ அறக்கட்டளை சார்பில் ஆதரவற்ற முதியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவன பயிற்சி மய்யத்தின் மேனாள் முதல்வர் எம்.கே.கருப் பையாவின் மூத்த மகள் டாக்டர் கே.சூர்யா…
மகப்பேறு மருத்துவ பெட்டகம்
ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் திண்டுக்கல் மரியநாதபுரத்தில் நேற்று (16.3.2024) நடைபெற்ற விழாவில் திண்டுக்கல் மாவட்டத்தில் ரூ.2.62 கோடி…
தமிழ்நாடு ஆளுநர்மீது குடியரசுத் தலைவரிடம் புகார் தி.மு.க. அறிவிப்பு
சென்னை, மார்ச் 17- தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத் தின் பதிவாளர், அனைத்து கல்வியியல் கல்லூரி முதல்வர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி இருந்தார். அதில், ஆளுநர் மாளிகை, பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்வியியல் கல்லூரிகளில் படிக்கும் பி.எட் மாணவர்களின் வாக் காளர்…
