செய்தியும், சிந்தனையும்…!
மீட்டது கடவுள் அல்ல! * குஜராத் வெள்ளத்தில் சிக்கிய தமிழ்நாட்டு பக்தர்கள் 27 பேர் மீட்பு >> மீட்டது கடவுள் அல்ல; மனிதர்கள். ‘கடவுளை மற, மனிதனை நினை’ – தந்தை பெரியார் கருத்து.
புரிந்துணர்வு ஒப்பந்தம்
ராணிப்பேட்டை, செப்.28 தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை வகையான வாகன உற்பத்தி தொழிற்சாலை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழ்நாடு அரசு மற்றும் டாடா மோட்டார்ஸ் குழுமத்திற்கும் இடையே ஏற்பட்டது. இந்த தொழில் பூங்காவில் 470 ஏக்கர் பரப்பளவில் இந்தியாவின் முன்னணி…
பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் கோவிலா?
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி அலமேலுபுரம் பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் பிள்ளையார் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இது அரசின் சட்டத்திற்கு விரோதமானது! தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.
சிறுபான்மை மக்கள் மீதான குஜராத் கலவரம் குஜராத் மாநில அரசின் மனு தள்ளுபடி – அரசுக்கு எதிரான கருத்துகளை நீக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
புதுடில்லி, செப்.28- பில்கிஸ் பானு வழக்கில் குஜராத் அரசுக்கு எதிரான கருத்துகளை நீக்கக் கோரிய குஜராத் அரசின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. குஜராத் மாநிலத்தில் கடந்த 2002ஆம் ஆண்டு கலவரம் வெடித்தது. அப்போது, பில்கிஸ் பானு என்ற கர்ப்பிணியை 9…
தேர்தல் பத்திர ஊழல் குற்றச்சாட்டு நிர்மலா சீதாராமன் மீது வழக்குப் பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு!
பெங்களூரு, செப்.28 தேர்தல் பத்திரம் மூலம் பணம் பறித்ததாக தொடரப்பட்ட வழக்கில் நிதிய மைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்கு பதிவு செய்ய பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கும் தேர்தல் பத்திரங்கள் சட்டவிரோதமானது என்று கடந்த…
தமிழர் தலைவரிடம் வாழ்த்துப் பெற்றார்
கழகத் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன் மற்றும் வெற்றிச் செல்வி ஆகியோரின் பெயரன் செவ்வியன் பிரான்சு நாட்டின் தலைநகரமான பாரீசுக்கு மேற்படிப்புக்குச் செல்வதையொட்டி விடுதலை வளர்ச்சிக்காக ரூ.3000 நன்கொடையை தமிழர் தலைவரிடம் வழங்கினார். தமிழர் தலைவரிடம் வாழ்த்துப் பெற்றார். (சென்னை –…
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினார்
பழனி தி.க. சேது அவர்களின் குடும்பத்தின் சார்பில் திராவிடர் கழக துணைப் பொதுச்செயலாளர் வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி, முதுகலை சட்டத்தில் (Distinction) பட்டம் பெற இருப்பதின் மகிழ்வாக பெரியார் உலகம் நன்கொடையாக ரூ.10,000 (இதுவரை ரூ.45,000) தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம்…
அக்டோபர் முதல் தேதி நாகையில் கடல் அலையாய்த் திரள்வீர்!
தமிழ்நாட்டு மீனவர்கள் கேட்பாரற்ற பிள்ளைகளா? ஒன்றிய பி.ஜே.பி. அரசு குறட்டை விடுகிறதா? சென்னை, செப்.28 தமிழ்நாடு மற்றும் புதுவையைச் சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்படும் நிகழ்வுகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. அதே…
‘கடவுள்’ காப்பாற்றவில்லையே!’ ம.பி.யில் கனமழை: உஜ்ஜைனியில் கோயில் சுவர் இடிந்து 2 பேர் பலி!
போபால், செப்.28 மத்திய பிரதேசத்தில் பெய்த கனமழைக்கு உஜ்ஜைனியில் கோயில் சுவர் இடிந்து 2 பேர் பலியாகினர். மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜையினியில் நேற்று (27.9.2024) இரவு பெய்த கனமழையைத் தொடர்ந்து அப்பகுதியிலுள்ள மஹாகாலேஷ்வர் கோயில் அருகே சுவர் இடிந்து விழுந்ததில்…
