பெரியார் குயில்,
தாராபுரம்
மழையும் குளிரும் காலையி லிருந்து கடுமை காட்டத் துவங்கி யிருந்தது….
மாற்று ஏற்பாடு என்னவாக இருக்கும் என்று யோசிக்கும் முன்பே ஈரோடு மாநாட்டு (26.11.2024) மேடைக்கு எதிர்ப்புறம் உள்ள மண்டபம் முன்னேற்பாடு செய்யப்பட்டிருந்தது!!
ஆசிரியர் 12 மணியளவில் வருகை தந்தார். அவரைச் சந்திக்க வேண்டும் என்ற அவாவோடு நூற்றுக்க ணக்கான தொண்டர்கள் தங்கும் விடுதியைச் சுற்றிச் சுற்றி வலம் வந்து கொண்டிருந்தார்கள்.
சந்திக்க வந்தவர்களில் ஈரோட்டின் முக்கிய ஆத்திகப் பிரமுகர்களும் அடங்கியிருந்தார்கள்.
உற்சாகமான சந்திப்புகள் 92 வயது இளைஞருக்கு பயணக்களைப்பைக் காணாமல் செய்தது! மற்றவருக்கு மரியாதை செலுத்துவதில் எழுந்து நின்று, அவர்களோடு ஆவ லோடு உரையாடியும் கடந்த கால நினைவுகளை அடுத்தடுத்து நினைவு கூர்வதும் ஒவ்வொருவரின் சந்திப்புக்கும் ஒவ்வொரு ஆச்சரியக்குறி விழுந்து கொண்டே இருந்தது!!
பேராசிரியர்களும், கல்வியா ளர்களும் ஆசிரியர் அவர்களின் ஓய்வறியாப் பணியை வெளிப்புறத்தில் சிறப்பித்துப் பேசிக் கொண்டிருந்தனர்.
மாலை 3.30 மணி: துடிப்புமிக்க இளைஞர் அணித் தோழர்கள் மண்ட பத்தின் இருக்கைகளை வரிசையாக இட ஆரம்பித்தனர். வெளியே இருந்த ஒலிப்பெருக்கிகள் மண்டபத்திற்குள் நகர்ந்தன.
குறிப்பாகப் பெண்களின் இளை ஞர்களின் அணி அணியான வருகை ஈரோட்டு மண்ணின் துடிப்பை உணர்த்தியது. இசை நிகழ்ச்சி ஆரம்ப மானது.
தமிழ்நாட்டின் எல்லாப் பகுதிக ளிலிருந்தும் வந்திருந்த கருஞ்சட்டைத் தோழர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்து மகிழ்ந்தனர்.
அறிஞர் பெருமக்கள் அனைவரும் மேடையில் ஏற, நூல் வெளியீட்டு விழா பெருமையுற நடைபெற்று, தோழர்கள் புத்தகம் வாங்க வரிசை கட்டி நின்றது பகுத்தறிவுப் பிரச்சாரத்தின் வீச்சு வளர்ந்து கொண்டே செல்கிறது என்பதை உணர்த்தி நின்றது.
பொருளாளர் வீ.குமரேசன் பேசத் துவங்கும் முன்பே மண்டபம் முழுக்க நிரம்பியது. வெளியே இருக்கையில் பலரும் அமர்ந்திருந்தனர்.
ஆசிரியர் அவர்களின் பேச்சு குடும்ப உறுப்பினர்களோடு உரை யாடும் மூத்தவர் போல, வாழும் வரலாறாக அமைந்திருந்தது சிறப்பி னும்
சிறப்பு….
சிறப்புப் பேச்சாளர்கள் தங்களது கருத்துக்களைப் பேசிய போது கருப்புச்சட்டை கூட்டம் தன்னை மீண்டும் மெருகேற்றிக் கொண்டது. மாநாட்டின் மிகப்பெரிய பிளஸ்! வேறு சட்டைகள் தென்படவில்லை. கருப்புச் சட்டை மட்டுமே அலை அலையாக அமர்ந்திருந்ததே!
நூற்றாண்டு கடந்து ‘‘சுயமரியாதை குடிஅரசைக்’’ கண்டது ஈரோடு!!