மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை அமைச்சகம் வகுத்துள்ள நெறிமுறைகளைப் பின்பற்றி, அஞ்சுகிராமம் முதல் நிலை பேரூராட்சியை திறந்தவெளி கழிப்பிடமற்ற Open Defecation Free Plus Town (ODF+) பேரூராட்சியாக அறிவித்திட அஞ்சுகிராமம் முதல் நிலை பேரூராட்சியின் மன்ற ஒப்புதல் பெற்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அஞ்சுகிராமம் முதல் நிலை பேரூராட்சியை திறந்தவெளி கழிப்பிடமற்ற Open Defecation Free Plus Town (ODF+) பேரூராட்சியாக அறிவித்திட தங்கள் மேலான கருத்துருக்கள், ஆலோசனைகள் மற்றும் ஆட்சேபனைகள் ஏதும் இருப்பின், செயல்அலுவலர், அஞ்சுகிராமம் முதல் நிலை பேரூராட்சி, 7/1 பேருந்து நிலையம், அஞ்சுகிராமம், கன்னியாகுமரி மாவட்டம், 629 401 என்ற முகவரிக்கு தபால் மூலமாகவோ அல்லது [email protected] என்ற முகவரிக்கு மின்னஞ்சல் மூலமாகவோ 11.11.2024 மாலை 6.00 மணிக்குள் தெரிவிக்கலாம் என இதன் மூலம் பொதுமக்களுக்கு அறிவிக்கப்படுகிறது.
/ஒப்பம்/
செயல் அலுவலர்,
அஞ்சுகிராமம் முதல்நிலை பேரூராட்சி,
கன்னியாகுமரி மாவட்டம்.
வெ.ஆ.எண்:264/செ.ம.தொ.அ/க.கு/நாள்: 30.10.2024