திருவாரூரில் தந்தை பெரியார் பிறந்தநாள் பேச்சுப்போட்டி – மாணவர்களுக்கு பரிசளித்து பாராட்டு

0 Min Read

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

திருவாரூர் கிடாரம் கொண்டான் திரு.வி.க கலைக் கல்லூரியில் நேற்று (24.10.2024) தந்தை பெரியார் 146 ஆவது பிறந்தநாள் மற்றும் சமூக நீதி நாளை முன்னிட்டு மாதவி கலையரங்கில் மாணவர்களுக்கானப் பேச்சுப்போட்டி நடைபெற்றது. இப்பேச்சுப் போட்டியில் கல்லூரி மாணவரும் திராவிட மாணவர் கழக (DSF) கல்லூரி தலைவரும் ஆகிய வே. அறிவழகன் முதல் பரிசு பெற்று மாநில அளவில் நடைபெறும் பேச்சுப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். கல்லூரி முதல்வர் உள்பட அனைவரும் பாராட்டினர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *