21.10.2024
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* பொதுமக்கள் கருத்தை அறியாமல் முடிவுகள் எடுக்க மாட்டோம். அதிகாரிகள் இதனை புரிந்து கொள்ள வேண்டும் – காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா திட்டவட்டம்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பான அமைச்சரவை முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர்: சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு. விடுதலை செய்வதற்கான அரசின் ஆலோசனையை நிராகரித்த ஆளுநர் ஆர்.என்.ரவியின் முடிவை ஏற்க நீதிமன்றம் மறுப்பு.
தி டெலிகிராப்:
* இன்ஸ்டாகிராம் பதிவில் பி.ஆர்.அம்பேத்கரின் படங்களை வெளியிட்டதற்காக, உ.பி.யின் கான்பூரில் தாழ்த்தப்பட்ட சமூக மாணவனை தாக்கி ‘ஜெய் சிறீராம்’ முழக்கமிடும்படி கட்டாயப்படுத்திய மாணவர்கள் கைது.
* தற்போதைய மகாராட்டிரா சட்டமன்றத்தின் பதவிக் காலம் நவம்பர் 26ஆம் தேதியுடன் முடிவடைகிறது. மாநிலத்தில் நவம்பர் 20ஆம் தேதி தேர்தல் நடைபெறும், நவம்பர் 23ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படும். மகாராட்டிரா தேர்தல் அட்டவணை, தங்களது எம்.வி.ஏ-வின் ஆட்சி அமைப்பதற்கான நேரத்தை குறைக்கும் பாஜகவின் தந்திரம் என சிவசேனா (உத்தவ்) சஞ்சய் ராவத் கடும் கண்டனம்.
– குடந்தை கருணா