7.10.2024
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* மோடி ஆட்சியில் முதலீடு, உற்பத்தி மற்றும் ஊதியம் சரிவை சந்தித்துள்ளது – மல்லிகார்ஜூனா கார்கே குற்றச்சாட்டு.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* அமைதி நிலவும் கோவாவில் வகுப்புவாத பதற்றத்தை பாஜக தூண்டி விடுகிறது. மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி.
* நாள் ஒன்றுக்கு, வருமானம் இல்லா பணியில், பெண்கள் 301 நிமிடங்கள் செலவிடுகிறார்கள்; ஆண்கள் செலவிடுவது 98 நிமிடங்களே. பணிக்கு செல்லும் பெண்களின் நிலை இன்னும் பரிதாபம் என்கிறது பன்னாட்டு அமைப்புடன் இணைந்து டாடா இன்ஸ்டிடியூட் நடத்திய ஆய்வு தகவல்.
தி டெலிகிராப்:
* நாடாளுமன்றத்தில் பெண்களின் பங்கேற்பு அதிக அளவில் அவசியம்: அதுவே ‘உண்மையான சமத்துவம்’ என ராகுல் கருத்து.
– குடந்தை கருணா