சென்னையில் கடந்த எட்டு மாதங்களில் 1,279 சைபர் குற்றங்கள் – விழிப்புடன் இருக்குமாறு காவல்துறை ஆணையர் எச்சரிக்கை

1 Min Read

சென்னை, செப்.15 சைபர் குற்றங்கள் தொடர்பாக சென்னையில் கடந்த 8 மாதங்களில் 1,679 புகார்கள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், ரூ.189 கோடிகளை பொதுமக்கள் இழந்துள்ளனர். எனவே, சைபர் குற்றவாளிகளிடம் சிக்கிக் கொள்ளாமல் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என காவல் ஆணையர் அறிவுரை வழங்கி உள்ளார்.

வழிப்பறி, திருட்டு நிகழ்வுகள் ஆங்காங்கே நிகழ்ந்து வந்த நிலையில், தற்போது இருந்த இடத்திலிருந்தே வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கி லிருந்து மொத்தப் பணத்தையும் திருடும் நிகழ்வு ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் சென்னையில் நடப்பு ஆண்டு ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை 8 மாதங்களில் சைபர் குற்றங்கள் தொடர்பாக 1,679 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் 1,589 வழக்குகள் நிதி இழப்பு தொடர்பான சைபர் குற்றங்கள் ஆகும்.

இவற்றில் பல்வேறு மோசடி களில் சுமார் ரூ.189 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. அவை இணைய தளப் பங்கு வர்த்தக மோசடி, பெடக்ஸ் கூரியர் மோசடி, ஸ்கைப் மோசடிகள், காவல்துறை அதிகாரி பெயரில் மோசடி, இணையவழி பகுதிநேர வேலை மோசடி,திருமண மோசடி, பரிசு மோசடி என மோசடிகளின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. இதுபோன்ற மோசடி வாயிலாக பொதுமக்கள் ஏமாறுவதைத் தடுக்கவும், மேலும் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் சைபர் கிரைம் காவல்துறையினருக்கு காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார். மேலும், சைபர் குற்றங்கள் தொடர்பான புகார்களை விசாரிப்பது தொடர்பாக அப்பிரிவு காவல்துறையினருக்கு வழிகாட்டுதல்களையும் வழங்கி உள்ளார்.

மேலும், பொதுமக்கள் அதிக லாபம் தரும் முதலீட்டு விளம்பரங்கள், போலியான முதலீட்டு செயலிகள், வலைதளங்களை பயன்படுத்தும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அறியாத வங்கிக் கணக்குகளில் பணத்தை செலுத்த வேண்டாம்.

சைபர்குற்றங்கள் மூலம் பாதிக்கப் பட்டால் சைபர் குற்றங்களுக்கான ஹெல்ப்லைன் எண் 1930 அல்லது www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் உடனடியாக புகார் அளிக்க வேண் டும். தொடர்ந்து சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களிலும் புகார் தெரிவிக்கலாம் என காவல் ஆணையர் அருண் அறிவுறுத்தியுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *