அந்தோ பாவம் கடவுள்! செங்கல்பட்டில் நள்ளிரவில் காசி விஸ்வநாதர் கோயில் சிலைகள் எரிந்ததால் பரபரப்பு மர்ம நபர்கள் கைவரிசையா? விசாரணை

1 Min Read

செங்கல்பட்டு, ஜன. 5- செங்கல்பட்டு அடுத்த வேம்பாக்கம் கிராமம், வேதகிரீஸ்வரர் நகரில் சுமார் 4 ஆயிரம் ஆண்டுகால மிக பழமை யான காசி விஸ்வநாதர் கோயில் அமைந்துள்ளது. ஆருத்ரா தரிசனம் என இந்த கோயிலில், 2.1.2026 அன்று பல்வேறு பூஜைகள் நடந்தனவாம்.

அனைத்து வழிபாடுக ளும் முடிந்த நிலையில், கோயிலை அர்ச்சகர்கள் பூட்டி விட்டு சென்றனர். பின்னர் நேற்று (4.1.2026) அதி காலையில் வழக்கம் போல் கோயிலை அர்ச்சகர்கள் திறக்க வந்துள்ளனர். அப்போது முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, அங்கு பிரகாரத்தில் இருந்த சிலைகள் மற்றும் ரூ.2 லட்சம் மதிப்பிலான வில்வ மர ஊஞ்சல் உள்பட ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்களை மர்ம நபர்கள் தீயிட்டு கொளுத் திய நிலையில் எரிந்து கிடந்தன.

தகவலறிந்து செங் கல்பட்டு தாலுகா காவல் துறையினர் விரைந்து வந்தனர். சிசிடிவி காமிரா காட்சிப் பதிவுகளை ஆய்வு செய்து விசாரித்தனர்.

மேலும், அங்கு கைரேகை நிபுணர்களுடன் மோப்ப நாய் வரவழைக் கப்பட்டது. தடயங்கள், கைரேகைகள் சேகரிக்கப் பட்டன. புகாரின்பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *