ஒன்றிய நீர்வளத் துறை அமைச்சருடன் தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சந்திப்பு நதிநீர் பிரச்சினை குறித்து மனு அளிப்பு

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

புதுடில்லி, ஜூலை 26- டில்லியில் ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சர் சி.ஆர்.பாட்டிலை, தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சந்தித்து பேசி னார். அப்போது அவரிடம் அமைச்சர் துரை முருகன் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில், கருநாடகாவில் தற்போது மழை பெய்து வருவதால் ஜூலை மாதத்திற்கான தண்ணீரை நிலுவை பாக்கி இல்லாமல் கருநாடக அரசு தந்துள்ளது. இந்த மாதம் இறுதிவரை தண்ணீர் திறந்துவிடுவதை உறுதி செய்ய வேண்டும்.

ஆகஸ்ட் மாதத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவுப்படி 45 டிஎம்சி தண்ணீர் திறந்து விடுவதை உறுதி செய்ய வேண்டும். முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள கேரள அரசு தடையாக இருப்பதால் ஒன்றிய அரசு அதில் தலையிட வேண்டும். காவிரி – குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு நிதி ஒதுக்க வேண்டும். மேகதாதுவில் அணை கட்ட அனுமதி வழங்கக்கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் இடம்பெற்றுள்ளன.இந்த நிலையில் ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சர் சி.ஆர்.பாட்டிலை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த அமைச்சர் துரைமுருகன் கூறியதாவது:-

புதிய அமைச்சரவை பதவியேற்றபின், துறை சார்ந்த அமைச்சரை மரியாதை நிமித்தமாக சந்தித்தோம். மேகதாது, காவிரி விவகாரம் குறித்து ஒன்றிய அமைச்சரிடம் தெளிவாக பேசினோம். காவிரியில் தடையின்றி தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளோம். காவிரி – குண்டாறு இணைப்புத் திட்டம் குறித்தும் ஒன்றிய அமைச்சரிடம் பேசியுள்ளோம்.

ஒன்றிய அமைச்சர் கோரிக்கைகளை கேட்டுவிட்டு நிறைய விஷயங்கள் பேசினார். அவர் ஹிந்தியில் பதிலளித்ததால் அவர் பேசியது எதுவும் எங்களுக்கு புரியவில்லை. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி ஒருபோதும் கருநாடகா காவிரி நீரை திறந்தது கிடையாது.
இவ்வாறு அவர் கூறினார்.

- Advertisement -

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *