புதிய சட்டங்களுக்கு ஹிந்தியில் பெயரா? ப.சிதம்பரம் எம்.பி. கேள்வி

1 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

அரசியல்

திருச்சி, ஆக. 20 காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மேனாள் ஒன்றிய அமைச்சரும்  மாநிலங்களவை உறுப்பி னருமான ப.சிதம்பரம்  புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

3 குற்றவியல் சட்டங்களை மறு சீரமைத்து அதற்கு ஹிந்தியில் பெயர் மாற்றம் செய்து புதிய மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.. நான் ஹிந்தியில் பெயர் வைப்பது கூடாது என்று சொல்லவில்லை. ஆங்கி லத்தில் சொல்லும்போது ஆங்கில பெயர் இருக்க வேண்டும். ஹிந்தியில் சொல்லும்போது ஹிந்தி பெயர் இருக்க வேண்டும்.இந்த சட்டங்கள் எல்லாம் ஆங்கிலத்தில் தான் வரைவு சட்டம் தயாரிக்கப்படுகிறது. ஒன்றிய அரசின் சட்ட அமைச்சகத்தில் இந்த சட்டத்தை எழுதும்போது ஆங்கிலத்தில் தான் எழுதப்படுகிறது. பிறகு ஹிந்தியில் மொழி பெயர்க்கின்றனர். நீதிமன்றங் களில் ஆங்கிலக் கடிதம் தான் பெரும் பகுதி பயன்படுத்தப்படுகிறது. ஹிந்தி மொழி பெயர்ப்பை யாரேனும் எடுத்து சொன்னால் கூட அதற்கு ஆங்கிலத்தில் என்ன சொல், என்ன பிரிவு என்று நீதிபதிகளே கேட்கின்றனர். அதனால் ஆங்கிலத்தில் இருப்பது தான் எல் லோருக்கும் பழக்கமானது.

ஆங்கில மொழி சட்ட வரைவுக்கு ஆங்கிலத்தில் பெயர் வைக்க வேண்டும். அதனை ஹிந்தியில் மொழி பெயர்த்துக் கொள்ளலாம். ஆனால் இவர்கள் ஆங்கிலத்தில் சட்டத்தை எழுதிவிட்டு பெயரை மட்டும் ஹிந்தியில் வைக்கின்றனர். அது வாயிலேயே நுழையவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *