கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
25.8.2023
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி., ஆலோ சனை இல்லாமல் நடைமுறைப்படுத்தியது போல், இல்லா மல் அய்.பி.சி. சட்டங்கள் குறித்து அனைத்து தரப்பினரிடமும் ஆலோசனை பெற்று சட்டங்கள் நிறை வேற்ற வேண்டும் என்கிறது தலையங்க செய்தி.
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* 17 லட்சம் பள்ளி சிறுவர்கள் பயன் பெறும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் இன்று முதல் விரிவாக்கம் செய்யப்படுகிறது.
* மோடி அரசு மக்களுக்கு வலியையும் துன்பத்தையும் மட்டுமே தந்துள்ளது என சச்சின் பைலட் பேச்சு.
தி இந்து:
* மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களில் நடைபெறவுள்ள தேர்தல்களில் காங்கிரஸ் வெற்றி பெறும் – ராகுல் நம்பிக்கை.
தி டெலிகிராப்:
* மலிவு அரசியலுக்காக தேசிய விருதுகளின் கண்ணியம் பாதிக்கப்படக் கூடாது என ‘காஷ்மீர் பைல்ஸ்’ படத்திற்கு விருது வழங்கியது குறித்து மறைமுகமாக தமிழ்நாடு முதலமைச்சர் கண்டனம்.
– குடந்தை கருணா