முழுதும் ஹைட்ரஜன் வாயுவில் இயங்கும் ஆடம்பர பயணியர் கப்பல் நெதர்லாந்து நாட்டில் உருவாக்கப்பட்டுள்ளது. ப்ராஜெக்ட் 821 என்று அழைக்கப்படும். இதில், ஹைட்ரஜன் மைனஸ் 253 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் சேமிக்கப்படுகிறது.
உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்குத் தேவையான உறுப்புகளை, நீண்டகாலம் கெடாமல் பாதுகாப்பது கடினமானது.
சீனாவைச் சேர்ந்த ஃபூடான் பல்கலை விஞ்ஞானிகள் மெத்தில் செல்லுலோஸ் உள்ளிட்ட நான்கு வேதிப் பொருட்களைக் கொண்டு, மெடி (MEDY) எனப்படும் திரவத்தை உருவாக்கி உள்ளனர். இதில் 18 மாதங்கள் வரை மூளையைக் கெடாமல் வைத்திருக்க முடியும்.