முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு அனைத்து மாவட்டங்களிலும் மாபெரும் மருத்துவ முகாம்!

2 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

சென்னை, மே 27- தி.மு.கழகத் தலைவர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, தி.மு.க. மருத்துவ அணியின் மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இணைய வழியில், 25-_5-_2024 அன்று மாலை 6:00 மணி அளவில் நடைபெற்றது. இக் கூட்டத்திற்கு கழக மருத்துவ அணித் தலைவர் மருத்துவர் கனிமொழி என்.வி.என் சோமு எம்.பி. தலைமை யேற்றார்.

மருத்துவ அணிச் செயலாளர் மருத் துவர், எழிலன் நாகநாதன் சட்டமன்ற உறுப்பினர் மருத்துவ அணியின் செயல்பாடுகள் மற்றும் இலக்குகள் குறித்து விரிவாக உரையாற்றினார். துணைத் தலைவர்கள், இணை மற்றும் துணைச் செயலாளர்கள் உள்ளிட்ட மருத்துவ அணியின் மாநில நிர்வாகிகள், இக்கூட்டத்தில் பங்கேற்று பல்வேறு கருத்துகளை எடுத்துரைத்தனர்.

மருத்துவ அணி துணைத் தலைவர் மருத்துவர் எ.வ.வே. கம்பன் நன்றியுரை வழங்கினார்.மருத்துவ அணி துணைச் செயலாளர் மரு அஞ்சுகம் பூபதி தீர்மானங்களை வாசித்தார்.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள்

நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து தொகுதிகளிலும், மாவட்ட நிர்வாகங் களோடும் வேட்பாளர்களோடும் இணைந்து, இந்தியா கூட்டணியின் வெற்றிக்கு உழைத்த, மருத்துவ அணியின் அனைத்து நிலை நிர்வாகிகளுக்கும் இக்கூட்டத்தின் வாயிலாக வாழ்த்து களையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம். முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழா தருணத்தில், அவர் தன் வாழ்நாள் முழுவதும் போற்றி பாதுகாத்த சமூக நீதி மற்றும் பகுத்தறிவு ஆகிய லட்சியங்களை பரப்புரை செய்யும் நோக்கில், தி.மு.க. மருத்துவ அணி சார்பில் சமூக நீதி மற்றும் பகுத்தறிவுப் பாசறை கூட்டங்களை மண்டல அளவில் நடத் துவது என இக்கூட்டத்தில் தீர்மானிக்கப் படுகிறது.

முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவில் சட்டமன்ற தொகுதிகள் தோறும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு, மண்டல அளவில் ஆங்கில கருத்தரங்கங்கள், மாவட்ட அளவில் மருத்துவ முகாம்கள் மற்றும் ரத்ததான முகாம்களை சீரோடு நடத்தி வந்துள் ளோம். இதன் தொடர்ச்சியாக முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் நூற் றாண்டு நிறைவு நிகழ்வை முன்னிட்டு, ஜூன் 03, 2024 தொடங்கி 15 நாட்களில் அனைத்து மாவட்டங்களிலும் மாபெரும் மருத்துவ முகாம் நடத்துவது என மருத்துவ அணி மாநில நிர்வாகிகள் அவசரக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படு கிறது.
இவ்வாறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *