பொய்களை பரப்பத்தானா மோடியை கடவுள் அனுப்பி வைத்திருக்கிறார்? : மம்தா கேள்வி

1 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

ஆசிரியர் அறிக்கை
கொல்கத்தா, மே 26 – தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தைச் சேர்ந்த மதுராப்பூர் பகுதியில் மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா கூறிய தாவது:
தேர்தலில் எங்கே தோற்றுவிடுவோமோ என்கிற பயத்தில் அர்த்தமின்றி வாய்க்கு வந்ததையெல்லாம் பாஜக தலைவர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இதில் ஒருவர் தன்னை கடவுளின் குழந்தை என்கிறார்.
நான் கேட்கிறேன், கலவரத்தைத் தூண்டிவிடவும், விளம்பரங்களின் வழியாகப் பொய்களை பரப்பவும், என்ஆர்சியை நடைமுறைப்படுத்துகிறேன் என்கிற பெயரில் மக்களை சிறையில் அடைக்கவுமா கடவுள் ஒருவரை அனுப்பி வைப்பார்? நூறுநாள் வேலை திட்டத்தின் நிதியை நிறுத்தவா, கிராமப்புற வீடுகள் கட்டப்படுவதைத் தடுக்கவா தனது தூதரை இறைவன் அனுப்பி வைப்பார்? மக்களின் வங்கிக்கணக்கில் 15 லட்சம் ரூபாய் செலுத் துவேன் என்கிற உத்தரவாதத்திலிருந்து இறை வன் பின்வாங்குவாரா என்ன? கடவுளால் இத்தகைய செயல்களை செய்ய முடியாது.
இவ்வாறு மம்தா கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *