சுற்றுலா தரவரிசையில் 39ஆவது இடத்தில் இந்தியா

viduthalai
1 Min Read

புதுடில்லி, மே 23- உலக பொருளாதார அமைப்பு ‘பயணம் மற்றும் சுற்றுலா மேம்பாட்டு குறியீடு 2024’ என்ற தலைப்பில் உலக நாடுகளின் சுற்றுலா செயல் பாடுகளை தரவரிசைபடுத்தியுள்ளது.

இந்தப் பட்டியலில் இந்தியா 39ஆ-வது இடத்துக்கு முன்னேறி யுள்ளது.  கரோனா காலகட்டத்தில் உலக அளவில் பயணம் மற்றும் சுற்றுலா செயல்பாடுகள் பெரும் முடக்கத்தைச் சந்தித்தன.  2022-க்கு பிறகு அவை படிப் படியாக இயல்பு நிலைக்கு திரும்பத் தொடங்கின.இந்நிலையில் இந்தப் பட்டிய லில் 2021ஆ-ம் ஆண்டு 54ஆ-வது இடத்தில் இருந்த இந்தியா, தற்போது 39ஆ-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

இந்தப் பட்டியலில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. அதைத் தொடர்ந்து ஸ்பெயின், ஜப்பான், பிரான்சு, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் உள்ளன.
தெற்கு ஆசிய மற்றும் நடுத்தர வருவாய் கொண்ட நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் பய ணச் செயல்பாடு தற்போது மேம் பட்டு இருப்பதாக இந்த அறிக் கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *