கருவிலுள்ள சிசுவின் பாலினத்தை வெளிப்படுத்துவது சட்டவிரோதம்

Viduthalai
2 Min Read

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை எச்சரிக்கை

சென்னை, மே 22- வலைஒளி யாளர் (You tuber) இர்பான் என்பவர் தான் துபாய் சென்ற போது தனது மனைவியின் கரு வில் உள்ள சிசுவின் பாலி னத்தை (பெண்) என்று ஸ்கேன் பரிசோதனை செய்து தெரிந்து கொண் டதாகவும் அதனை குடும்ப நிகழ்ச்சி ஒன்றின் போது அங்கு குழுமியிருந் தவர்களிடம் தெரிவித்து உள்ளார்.

அந்த நிகழ்வினை ஒளிப்படமாக எடுத்து 19.5.2024 அன்று தனது You tube Channal-ன் மூலம் வெளியிட்டுள் ளார். அதனை இதுவரை பல பார்வையாளர்கள் உலகம் முழுவதும் பார்த் தும் பகிர்ந்தும் உள்ளனர்.
மேலும், இந்தியாவில் சிசுவின் பாலினம் அறிவ தும் அறிவிப்பதும் பாலி னத் தேர்வை தடை செய்தல் சட்டம் 1994 (PCPNDT ACT 1994) (Central Act 57 of 1994)இன் படி தடை செய்யப் பட்டுள்ளது. இத்தகைய செயலால், தமிழ்நாடு மட்டுமல்லாமல் அகில இந்திய அளவில் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் குறையும். மேலும், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகமாகும் வாய்ப்பு உள்ளது.

எனவே, இதுபோன்ற செயலில் ஈடுபடும் நபர் களின் மீது சட்டப்பூர்வ மான நடவடிக்கை எடுக் கும் பொருட்டு, மாநில அமலாக்க அலுவலர், (PCPNDT ACT 1994) மற்றும் இயக்குநர், மருத் துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் அவர்க ளால் இர்பான் அவர்க ளுக்கு 21.05.2024 அன்று பாலினத் தேர்வை தடை செய்தல் சட்ட விதிகளை மீறியதற்காக குறிப் பானை சார்பு செய்யப் பட்டுள்ளது.

மேலும், இர்பான் அவர்களால் வலை யொளி செய்யப்பட்ட ஒளிப்படத்தினை சமூக வலைதளங்களிலிருந்து உடனடியாக நீக்கிட வலையொளி தளத்திற் கும், கணிணி குற்றம் (Cyber Crime) பிரிவிற்கும் 21.05.2024 நாளிட்ட கடி தம் மூலம் அறிவுறுத்தப் பட்டுள்ளது.
கருவின் பாலினம் அறிவதும் அறிவிக்கும் செயலில் ஈடுபடும் நபர் கள், ஸ்கேன் சென்ட்டர் கள், மருத்துவமனைகள் மீது இந்த அரசு கடுமை யான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளும் என் பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படு கிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *