பா.ஜ.க.வுக்கென தனித்த கொள்கை எதுவும் இல்லை! மல்லிகர்ஜுன கார்கே பிரச்சாரம்!

Viduthalai
1 Min Read

ஜெய்ப்பூர், நவ. 20 – ராஜஸ்தான் மாநிலத்தில் வரும் 25ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பிரச்சாரங்கள் சூடுபிடித்துள்ளன.

பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகர்ஜுன கார்கே, பா.ஜ.க.வுக்கு என எந்தக் கொள்கையும் இல்லை என்றும், தேர்தலுக்காக காங்கிரஸின் வாக்குறுதிகளை காப்பியடிக்கிறது என்றும் விமர்சித்துள்ளார். ராஜஸ் தான் மாநிலத்தில் முதலமைச்சர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருக் கிறது. இம்மாநிலத்தில் மொத்தம் 200 தொகுதிகள் இருக்கின்றன. 

இந்நிலையில் மாநிலத்திற்கு வரும் 25ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதில் எப்படியாவது ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள காங்கிரஸ் பல்வேறு வியூகங்களை வகுத்துள்ளது. 

எனவே காங்கிரஸ் தீவிர பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறது. பரத்பூர் மாவட்டத்தின் வயர் சட்டமன்ற தொகுதியில் தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்று பேசிய அக்கட்சியின் தலைவர்மல்லிகர்ஜுன கார்கே, பா.ஜ.க.வுக்கு என எந்த கொள்கையும் இல்லை என்றும், தேர்தலுக்காக காங்கிரஸின் தேர்தல் வாக்குறுதிகளை பா.ஜ.க. காப்பி யடிக்கிறது என்றும் விமர்சித்துள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *