புதுடில்லி, ஏப்.27- டில்லி ஆளுநர் வி.கே.சக் சேனா 2 நாள் பயணமாக கேரளா சென்ற நிலையில், அங்கு கிறிஸ்தவ மத தலைவர்கள் (பிஷப்) சிலரை சந்தித்ததாகத் தெரிகிறது. இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பிஷப்புகளை ஆளுநர் சந்தித்தது தேர்தல் விதிமீறல் என பலரும் கூறியுள்ளனர்.
எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேரள சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் மூத்த நிர்வாகியுமான வி.டி.சதீசன் தேர்தல் ஆணையத்திற்குக் கடிதம் எழுதியுள்ளார். “ஆளுநர் அரசமைப் புச் சட்டத்துக்கு உட்பட்ட வர் என்பதால் அவர் எந்த அரசியல் நடவடிக்கைகளிலும் ஈடுபடக்கூடாது. இதனை மீறியதற்காக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அவர் கடிதத்தில் கோரியுள்ளார்.
டில்லி ஆளுநர் கேரளா கிறிஸ்தவ மத போதகரை சந்தித்த பின்னணி என்ன?
Leave a comment