விளம்பரங்களுக்கு மட்டும் 10 ஆண்டுகளில் ரூ.3,641 கோடியை மோடி அரசு செலவிட்டுள்ளது! ஆர்.டி.அய். மூலம் அம்பலம்!

viduthalai
1 Min Read

புதுடில்லி, ஏப்.21, 2014 ஜூன் மாதம் முதல் 2024 மார்ச் மாதம் வரை தொலைக்காட்சி விளம்பரங்களுக்கு மட்டும் ரூ.2,974 கோடியை செலவிட்டுள்ளது ஒன்றிய பா.ஜ.க. மோடி அரசு.
விளம்பரங்களுக்கு மட்டும் 10 ஆண்டுகளில் ரூ.3,641 கோடியை மோடி அரசு செலவிட்டுள்ளது ஆர்.டி.அய். மூலம் அம்பலமாகியுள்ளது.

2016-2017 ஆம் ஆண்டு காலகட்டத்தில் விளம்பரங் களுக்காக மட்டும் ரூ.519 கோடியை செலவிட்டு உள்ளது.
எஸ்.எம்.எஸ்., டிஜிட்டல் விளம்பரங்களுக்கு மட்டும் ரூ.667.38 கோடியை மோடி அரசு செலவிட்டுள்ளது.

பத்திரிகை விளம்பரங்கள், பொது இடங்களில் வைக்கப்பட்ட பதாகைகள் உள்ளிட்டவற்றிற்கு செலவு செய்த தகவல் வெளியாகவில்லை.

டிஜிட்டல், போஸ்டர் விளம்பரங்கள், ரயில்வே டிக்கெட் உள்ளிட்ட விளம்பரங்களுக்கு மோடி அரசு செலவிட்ட தொகை விவரம் வெளியாகவில்லை.
விளம்பரங்களுக்கு ரூ.3,641 கோடி செலவிட்ட மோடி அரசுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *