தமிழ்நாட்டைப் பாருங்கள்
ஒன்றுபட்டு பிஜேபியை வீழ்த்துங்கள்!
சிபிஎம் தேசிய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி வேண்டுகோள்
சென்னை,ஏப்.12- மத்திய சென்னை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் தயாநிதிமா றனுக்கு வாக்கு கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சென்னை புரசைவாக்கத்தில் நேற்று தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டம் நடைபெற்றது.
இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தேசிய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி கலந்து கொண்டு பேசியதாவது:
சுதந்திர இந்தியாவில் அதிக ஊழல் செய்த கட்சி பாஜகதான். தேர்தல் பத்திரங்கள் மூலம் கோடிக்கணக்கான பணத்தை அக்கட்சி பெற்றுள்ளது. இந்தியா வில் தேர்தல் பத்திரங்கள் மூலம் ஒரு பைசாகூட பெறாத கட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தான்.
சிபிஅய், வருமான வரித்துறை, அமலாக்கத் துறை போன்ற அமைப்புகள் மூலம் கார்ப்பரேட் முதலாளிகளை மிரட்டியும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சலுகைகள் அளித்தும், கரோனா பெருந்தொற்று காலத்தில் மருந்து கம்பெனிகளை மிரட்டியும் தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜக பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாயை திரட்டியுள்ளது. இந்த ஊழலை சட்டப்பூர்வமாகவும் செய்துள்ளது.
பாஜக கட்சியில் சேர்ந்தால் அவர்கள் நியாயவாதிகள். அக்கட் சியை எதிர்த்தால் ஊழல்வாதிகள். இந்தகேலிக்கூத்தில் ஈடுபடும் பாஜக வுக்கு இத்தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.
நாட்டின் மதச்சார்பற்ற தன்மை,கூட்டாட்சி, சமூகநீதி, இறையாண்மை என ஒவ்வொரு தூணாகபாஜக சாய்த்து வருகிறது. தேர்தல்ஆணையம், நீதித் துறை யையும் கூட தங்களுக்கு சாதகமாக செயல்பட வைக்கிறார்கள். நாட் டில் ஒற்றுமையை சீர்குலைத்து, ஜனநாயகத்தை அழிக்கத் துடிக்கும் இந்த பாசிச சக்திகளை முறியடிக்க வேண்டும்.
குடியுரிமை திருத்தச் சட்டத்தை தேர்தல் நேரத்தில் கொண்டு வந்து மக்களிடத்தில் கலவரத்தையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியிருக் கிறார்கள். நாட்டின் ஒருமைப் பாட்டைக் குலைக்கும் செயலைத் தட்டிக்கேட்டால் அவர்களை தேசிய விரோதிகளாக சித்தரிக் கிறார்கள்.
பாஜக ஆளும் மாநிலங் களையும், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களையும் சமமாக நடத் தாமல் மாற்றாந்தாய் மனப்பான் மையுடன் நடத்துகின்றனர். இந் தப் போக்குசர்வாதிகாரத்துக்கே வழிவகுக்கும். நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத் துவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பாஜக, மனுநீதி பேசி மக்களைப் பிளவுபடுத்தப் பார்க்கிறது.
அதைத்தடுக்க கடந்த மக்களவைத் தேர்தலைப் போல இந்தத்தேர்தலிலும் தமிழ்நாட்டில் ஒருஇடத்தில் கூட பாஜக கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெறக்கூடாது. இதனை நாம் உறுதி செய்ய வேண்டும்.
தமிழகத்தைப் பின்பற்றி அனைத்து கட்சிகளும் ஒன்றி ணைந்து பாஜக அரசை தோற் கடிக்க வேண்டும்.
-இவ்வாறு சீதாராம் யெச்சூரி கேட்டுக் கொண்டார்.