‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ மூலம் அரசியல் சட்டத்தை அழிக்க பிஜேபி முயற்சி : காங்கிரஸ் கண்டனம்

viduthalai
1 Min Read

புதுடில்லி,மார்ச் 15- நாடாளுமன் றத்துக்கும், மாநில சட்டமன்றங் களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்ற கருத்தை பிரதமர் மோடி வலியுறுத்தி வருகிறார். இதன்மூலம், வளர்ச்சி திட்டங்களை இடையூறு இன்றி அமல்படுத்த முடியும், தேர்தல் செலவுகளை குறைக்க முடியும் என்றும் அவர் கூறுகிறார்.
எனவே, ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ என்ற இந்த திட்டத்தை அமல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக, மேனாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் ஒரு உயர்மட்ட குழுவை கடந்த செப்டம்பர் மாதம் ஒன்றிய அரசு அமைத்தது.
இந்தசூழலில் இதற்கான பணிகள் முடிந்தநிலையில், நேற்று (14.3.2024) குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. 18 ஆயிரத்து 626 பக்கங்கள் கொண்ட அறிக் கையை ராம்நாத் கோவிந்த் தாக்கல் செய்தார். இதன்படி நாடாளுமன் றம், சட்டமன்றங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துமாறு ராம்நாத் கோவிந்த் குழு பரிந்துரை செய்துள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து காங் கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய் ராம் ரமேஷ் கூறுகையில், “பிர தமர் மோடியின் நோக்கம் மிகவும் தெளி வானது. அவர் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன், அதா வது 400 தொகுதிகளில் வெற்றியை அளிக்குமாறு கேட்டு வருகிறார். அம்பேத்கரின் அரசியல் சட்டத்தை முற்றிலும் அழிக்க அவர்கள் விரும் புகிறார்கள். ‘ஒரே நாடு, தேர்தல் கிடையாது’ என்பது தான் அவர் களது நோக்கம்” என்று அவர் கூறினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *