ஒரே நாடு ஒரே தேர்தலா?

viduthalai
4 Min Read

பிஜேபி திட்டத்திற்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு! உயர்மட்ட குழுவை கலைத்திடுக!!
காங்கிரஸ் தலைவர் கார்கே கடிதம்

புதுடில்லி, ஜன.21- ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டத்துக்கு காங்கிரஸ் தி கட்சி எதிர்ப்பு தெரிவித் துள்ளது. அதுதொடர்பான உயர் மட்ட குழுவை கலைக்குமாறு மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார்.

கார்கே கடிதம்

நாடாளுமன்றம், சட்டமன்றங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் திட்டத்தை செயல்படுத்த ஒன்றிய அரசு விரும்புகிறது. அதுபற்றி ஆராய குடியரசு மேனாள் தலைவர் ராம்நாத்கோவிந்த் தலைமையில் உயர்மட்ட குழுவை அமைத்துள்ளது.

அக்குழு, அனைத்து அரசியல் கட்சிகளிடமும் கருத்து கேட்டு கடிதம் எழுதியது.இந்நிலையில், குழுவுக்கு காங்கிரஸ் கட்சி தனது பதிலை அனுப்பி வைத்துள்ளது.
இதுதொடர்பாக உயர் மட்ட குழுவுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:- ஒன்றிய அரசு, நாடாளுமன்றம், தேர்தல் ஆணை யம் ஆகியவை மக்கள் தீர்ப்பை மதிக்கும்வகையில் இணைந்து செயல்பட வேண்டும். அதை விட்டு, ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ போன்ற ஜனநாயக விரோத திட்டங்களை பற்றி பேசி, மக்களின் கவனத்தை திசைதிருப்பக்கூடாது.

பாரபட்சமானது: இந்த திட்டத்தை காங்கிரஸ் கடுமையாக எதிர்க்கிறது. இது கூட்டாட்சி முறைக்கு எதிரானது. மேலும், உயர் மட்ட குழுவில் எதிர்க் கட்சிகளுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கப்படாமல் பாரபட்சம் காட்டப்பட்டுள்ளது.

‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டத்தை அமல்படுத்த பாதி ஆட்சிக்காலத்தை கூட தாண்டாத மாநில அரசுகளை கலைக்க வேண்டி இருக்கும். அது மக்களின் தீர்ப்புக்கு எதிரான செயல்.

தனித்தனியாக தேர்தல் நடத்துவதால், தேர்தல் செலவு அதிகரிக்கிறது என் பது ஏற்புடையது அல்ல. கடந்த 5 ஆண்டுகளில், தேர்தல் செலவுக்கு ஆன தொகை, ஒன்றிய அரசின் மொத்த பட்ஜெட்டில் வெறும் 0.02 சதவீதம்தான். ஜனநாயகம் செழிக்க மக்கள் இச்செலவை ஏற்றுக்கொள்வார்கள்.
கண்துடைப்பு: அரசியல் சட்டத்தின் அடிப்படை கட்டமைப்பையும், நாடாளுமன்ற ஜனநாயகத்தையும் தகர்க்க ஒன்றிய அரசு முயற்சிக்கிறது. அதற்கு தனது ஆளுமையை தவறாகப் பயன்படுத்த ராம்நாத் கோவிந்த் அனுமதிக்கக்கூ டாது.

இந்த திட்டத்தை கைவிட வேண்டும். உயர்மட்ட குழு தனது முடிவை ஏற்கனவே தீர்மானித்து விட்டு, கண்துடைப்புக்காக கருத்து கேட்பதாக தோன்று கிறது. அதனால், உயர்மட்ட குழுவை கலைக்க வேண்டும். -இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வாக்குறுதியை பா.ஜ.க. நிறைவேற்றவில்லை சச்சின் பைலட் குற்றச்சாட்டு

புதுடில்லி,ஜன.21- பா.ஜ.க. அரசு தனது வாக்குறுதி களை நிறைவேற்றவில்லை என காங்கிரஸ் மூத்த தலைவர் சச்சின் பைலட் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறிய தாவது;-
“அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை பா.ஜ.க. அரசியலாக்குகிறது. கடவுள் ராமர் அனைவருக்கும் சொந்தமானவர். ஆனால் அவரை பா.ஜ.க. தங்களுக்குரியவராக்க முயற்சிக்கிறது.
பா.ஜ.க. அரசால் தங்கள் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியும் என்று எனக்கு தோன்றவில்லை. கடந்த 10 ஆண்டுகளாக ஒன்றிய ஆட்சியில் இருக்கும் மோடி அரசாங்கம், இதுவரை 2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வாக் குறுதியை நிறைவேற்றவில்லை.
எதிர்வரும் மக்களவை தேர்தலில் ‘இந்தியா’ கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும். அண்மையில் சத்தீஷ்காரில் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்திருந்தாலும், வாக்கு சதவீதத்தில் குறைவு ஏற்படவில்லை. ‘இந்தியா’ கூட்டணியை பலப்படுத்தும் முயற்சிகள் நடந்து வருகின்றன.”
-இவ்வாறு சச்சின் பைலட் தெரிவித்தார்.

விடுமுறை அதிகார மீறல்!

புதுடில்லி, ஜன.21 – ஜனவரி 22 அன்று மதியம் வரை அனைத்து அரசு அலுவலகங்களும், ஒன்றிய அரசின் கீழ் உள்ள நிறுவனங் களும், தொழில் நிறுவனங்களும் மூடப்பட்டிருக்க வேண்டும் என்று ஒன்றிய அர சாங்கம் “அதிகாரப்பூர்வ குறிப்பாணை” (“ளியீயீவீநீமீ விமீனீஷீக்ஷீணீஸீ பீuனீ”) வெளியிட்டுள்ளது.
இதனை அதிகாரத்தை பயன்படுத்துதல் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டித்துள்ளது. இதுதொடர்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் அரசியல் தலை மைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
அயோத்தியில் ராமன் கோவில் தொடர்பான சமய நிகழ்வுகளில் பங்கேற்பதற்கு ஊழியர்களுக்கு வசதி செய்துதரும் விதத்தில் ஜனவரி 22 அன்று மதியம் 2.30 மணி வரை அனைத்து அரசு அலுவலகங்கள், ஒன்றிய அரசின் கீழ் இயங்கும் நிறு வனங்கள் மற்றும் தொழில் நிறு வனங்கள் அனைத்தும் மூடப்பட்டி ருக்கும் என்று ஒன்றிய அரசாங்கம் “அதிகாரப்பூர்வ குறிப்பாணை” (“ளியீயீவீநீவீணீறீ னீமீனீஷீக்ஷீணீஸீபீuனீ”) வெளியிட்டிருக்கிறது. இதே போன்றே பா.ஜ.க. ஆளும் மாநில அரசாங்கங்களும் செய்திருப்ப தாக செய்திகள் வெளியாகி இருக் கின்றன.
இது, முற்றிலும் மதஞ்சார்ந்த விழாவில் கலந்து கொள்ள அரசை யும், அரசாங்கத்தையும் நேரடியாக சம்பந்தப்படுத்திடும் மற்றுமொரு நடவடிக்கையாகும். ஊழியர்கள் தங்கள் மத நம்பிக்கை மற்றும் செயல் பாடுகள் தொடர்பாக தாங்கள் சொந்தமாக தெரிவு செய்து கொள்வதற் கான உரிமையைப் பெற்றிருக்கிறா ர்கள்.
ஆனால் அரசாங்கம் இவ்வாறு ஒரு சுற்றறிக்கை அனுப்பியிருப்பதன் மூலம் தன் அதிகாரத்தை முற்றிலுமாகத் தவறாகப் பயன்படுத்தியிருக்கிறது.
அரசாங்கத்தின் இத்தகைய செயல்கள், அரசு என்பது எவ்விதமான மதச்சாயமுமின்றி இருந்திட வேண்டும் என்கிற உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டும் நெறிமுறைகளுக்கும், அரசமைப்புச் சட்டத்திற்கும் எதிரானது என்கிற தன்னுடைய நிலைப்பாட்டை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மீண்டும் உறுதிபடத் தெரிவித்துக் கொள்கிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *