புதுடில்லி, ஜன. 14- இளைஞர் களுக்கு வழிகாட்டியாக விளங்கிய சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளான ஜனவரி 12, ஒவ்வொரு ஆண்டும் தேசிய இளைஞர் நாளாக கொண்டாடப்படுகிறது.
அதன்படி 12.1.2024 அன்று நாடு முழுவதும் தேசிய இளைஞர் தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி காங்கிரஸ் மேனாள் தலைவர் ராகுல் காந்தி எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியுள்ளதாவது:
-நாம் கனவு காணும் இந்தியா வின் அடையாளம் என்னவாக இருக்கும் என்று இளைஞர்கள் சிந்திக்க வேண்டும்? வாழ்க்கையின் தரமா அல்லது உணர்ச்சிகள் மட்டும்தானா? ஆத்திரமூட்டும் முழக்கங்களை எழுப்பும் இளைஞர் களா அல்லது வேலை செய்யும் இளைஞர்களா? அன்பா அல்லது வெறுப்பா?
இன்று, உண்மையான பிரச் சினைகளில் இருந்து கவனத்தை திசை திருப்ப உணர்வுப்பூர்வமான விஷயங்கள் அரசியல் ரீதியாக தவறாகப் பயன்படுத்தப்படுகின் றன. இது நாட்டு மக்களுக்கு செய்யும் துரோகமாகும்.
அதிகரித்து வரும் வேலையில் லாத் திண்டாட்டம் மற்றும் பண வீக்கத்துக்கு மத்தியில், இளைஞர் கள் மற்றும் ஏழைகள் கல்வி, வாழ்வாதாரம் மற்றும் மருத்துவ உதவி கிடைக்காமல் அவதிப் படுகின்றனர்.
ஆனால், அரசாங்கமோ அமிர்த காலம் கொண்டாடுகிறது.அதிகாரத்தின் ஆணவத்தில் போதை யில் இருக்கும் பேரரசர், அடிப்படை யதார்த்தத்திலிருந்து வெகு தொலைவில் இருக்கிறார்.
அதனால்தான், இந்த அநீதிப் புயலில் நீதியின் சுடரை எரிய வைக்க, சுவாமி விவேகானந்தரின் போதனைகளிலிருந்து உத்வேகம் பெற்று, நீதிக்கான உரிமை கிடைக் கும் வரை, கோடிக்கணக்கான இளம் ‘நியாயோதா’க்கள் என்னு டன் இந்தப் போராட்டத்தில் இணைந்து கொண்டிருக்கிறார்கள்.
உண்மை வெல்லும், நீதி வெல்லும். இவ்வாறு ராகுல் காந்தி கூறியுள்ளார்.
மக்களின் உண்மையான பிரச்சினைகளிலிருந்து திசை திருப்ப உணர்வுப்பூர்வமான விடயங்கள் அரசியலாக்கப்படுகின்றன ராகுல் காந்தி கருத்து

Leave a Comment