இரண்டாவது ஒற்றுமை நடைப்பயணம் ஜனவரி 14இல் தொடங்குகிறார் ராகுல் காந்தி

2 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

புதுடில்லி, டிச. 29- காங்கிரஸ் பொதுச் செயலர் கே.சி.வேணு கோபால் 27.12.2023 அன்று செய் தியாளர்களிடம் கூறியதாவது:
வரும் 2024 பொதுத் தேர் தலுக்கு முன்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி நடைப் பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்த நடைப் பயணத்துக்கு “பாரத் ஜோடோ யாத்ரா” _ அதாவது ஒற்றுமை நடைப் பயணம் என்று பெயரிடப்பட இருந்த நிலையில், இந்தியாவுக்கான நியாயம் கேட் கும் நடைப் பயணமாக பாரத் நியாய் யாத்ரா என்ற பெயரை காங்கிரஸ் காரிய கமிட்டி ஒரு மனதாக முன்மொழிந்து அது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த நியாயம் கேட்கும் நடைப் பயணத்தை 14 மாநிலங்கள் மற்றும் 85 மாவட்டங்களில் 6,200 கி.மீ. தொலைவுக்கு நடத்த திட்டமிடப் பட்டுள்ளது.
இது, காங்கிரஸுக்கும், ‘இண் டியா’ கூட்டணிக்கும் புத்துணர்வு தரும் நடைப்பயணமாக அமையும். இந்த நடைப் பயணத்திற்கான பயணத்தை கிழக்கில் தொடங்கும் ராகுல் காந்தி மேற்கில் முடிக்க உள்ளார்.

அண்மையில் வன்முறைச் சம் பவங்களால் மிகவும் பாதிப்புக் குள்ளான மணிப்பூரில் தொடங் கும் இந்த நடைப் பயணம், நாகா லாந்து, அசாம், மேகாலயா, மேற்கு வங்கம், பீகார், ஜார்க்கண்ட், ஒடிசா, சத்தீஸ்கர், உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், குஜராத் மற்றும் மகாராட்டிரா ஆகிய 14 மாநிலங்களின் வழியே நடைபெற்று இறுதியில் மும்பை யுடன் முடிவடைய உள்ளது.

இந்த நியாயம் கேட்பு நடைப் பயணத்தின்போது ராகுல்காந்தி, பிற கட்சி தலைவர்கள், இளை ஞர்கள், பெண்கள், விளிம்புநிலை மக்களுடன் உரையாடி அவர்க ளின் கருத்துகளை கேட்டறிவார். காங்கிரஸ் கட்சித் தலைவர் மல் லிகார்ஜுன கார்கே இந்த நடைப் பய ணத்தை கொடியசைத்து தொடங்கி வைக்க உள்ளார். ஜனவரி 14ஆ-ம் தேதி தொடங் கும் இந்த நடைப் பயணம் மார்ச் 20-ஆம் தேதி நிறைவுபெறும். இவ்வாறு வேணுகோபால் தெரிவித்தார். காங் கிரஸ் கட்சியின் நிறுவன நாளைக் கொண்டாடும் வகையில் நாக்பூரில் ‘ஹேன் தய்யார் ஹம்’ பேரணிக்கு காங் கிரஸ் கட்சி இன்று ஏற்பாடு செய்துள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *