“வைக்கம் போராட்டம்” நூற்றாண்டு சிறப்பு விழா

viduthalai
1 Min Read

தந்தை பெரியார் நினைவிடத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் – கேரள மாநில முதலமைச்சர்!
தந்தை பெரியார் நினைவிடத்தில் வைக்கம் நூற்றாண்டு மலர் வெளியீடு
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி – அமைச்சர் பெருமக்கள் பங்கேற்பு!

இன்று (28.12.2023) சென்னை, பெரியார் திடலில் நடைபெற்ற “வைக்கம் போராட்டம்” நூற்றாண்டு சிறப்பு விழாவின்போது, தந்தை பெரியார் அவர்களின் நினைவிடத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும், கேரளா மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் அவர்களும் மலர்வளையம் வைத்து, மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள். உடன் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் இன்று (28.12.2023) சென்னை, பெரியார் திடலில் நடைபெற்ற “வைக்கம் போராட்டம்” நூற்றாண்டு சிறப்பு விழாவில் “பெரியாரும் வைக்கம் போராட்டமும்” என்ற நூலை கேரளா மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் அவர்கள் வெளியிட்டார். இவ்விழாவில், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர்மு.பெ.சாமிநாதன், அமைச்சர் பெருமக்கள், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் மருத்துவர் இரா.செல்வராஜ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *