சென்னை, டிச. 18 – தமிழ்நாடு முழுவதும் 2,300 ஏரிகள், உலக வங்கி உதவியுடன் ஆழப்படுத்தப்பட்டு பழைய நிலைக்கு மீட்டெ டுக்கப்படும் என உயர் நீதிமன் றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
மழைக்காலங்களில் மழைநீர் வீணாக கடலில் கலப்பதை தடுக் கும் வகையில், தமிழ்நாட்டில் 234 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் உள்ள ஏரி, கால்வாய்களை ஆழப் படுத்தி தூர் வாரவும், தேவையான இடங்களில் ஆழ்துளை கிணறு களை அமைக்கவும், உரிய தடுப் பணைகளை கட்டவும் வலியுறுத்தி சென்னை செம்பியத்தை சேர்ந்த ஜி.தேவராஜன் என்பவர், உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந் திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது மாநில அரசு ப்ளீடர் பி.முத்துக்குமார் மற்றும் சிறப்பு அரசு ப்ளீடர் ஆர்.அனிதா ஆகியோர் ஆஜராகி, தமிழ்நாடு முழுவதும் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, தூய்மைப்படுத்த எடுத்த நடவடிக் கைகள் குறித்து தமிழ்நாடு அரசு தரப்பில் பதில்மனு தாக்கல் செய் தனர். அதில் கூறியிருப்பதாவது:
நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றி பாதுகாப்பது தொடர்பாக உயர் நீதிமன்ற உத்தரவுப்படி மண் டல, மாவட்ட, மாநில அளவில் குழுக்களை அமைத்து, கடந்த 2022 பிப்ரவரியில் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் மாத நிலவரப்படி 20,150 நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, 7,569 ஏரிகள் ஆக் கிரமிப்பு இல்லாமல் பராமரிக் கப்பட்டு வருகின்றன. மேலும், கேரளா, ஆந்திராவுடன் மேற் கொள்ளப்பட்டுள்ள நீர் பங்கீட்டு ஒப்பந்தங்கள் மீறப்படும்போது தமிழ்நாட்டின் உரிமைகளை பாது காக்க உரிய நடவடிக்கை எடுக் கப்பட்டு வருகிறது. நீர்நிலைகள் மராமத்து மற்றும் புதுப்பிப்பு, சீர மைப்பு திட்டத்தின்கீழ் தமிழ்நாடு முழுவதும் 2,300 ஏரிகள், உலக வங்கி நிதியுதவியுடன் ஆழப்படுத் தப்பட்டு, அவற்றை பழைய நிலைக்கு மீட்டெடுக்கப்பட உள்ளன.
இவ்வாறு பதில் மனுவில் கூறப் பட்டுள்ளது. அதை பதிவு செய்து கொண்டநீதிபதிகள், வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டுள் ளனர்.