சென்னை, அக்.28- சென்னை மாவட்ட வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. அதில் மொத்தம் 38,68,000 வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர். 48,000 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள் ளனர்.
இந்திய தேர்தல் ஆணைய அறிவுறுத் தலின்படி சென்னை மாவட்டத்தில் உள்ளடங்கிய 16 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி ரிப்பன் மாளிகையில் நேற்று (27.10.2023) நடை பெற்றது. இதில் கூடுதல் ஆணையர் ஆர்.லலிதா பங்கேற்று வரைவுவாக் காளர் பட்டியலை வெளியிட்டார். அதை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பெற்றுக் கொண்டனர்.
கடந்த ஜன.5ஆ-ம் தேதி வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டிய லில் ஆண் வாக்காளர்கள் 19,09,512, பெண் வாக்காளர்கள் 19,71,653, இதர வாக்காளர்கள் 1,112 என மொத்த 38,82,277 வாக்காளர்கள் இடம் பெற்றி ருந்தனர்.
அதன் பிறகு நடைபெற்ற தொடர் திருத்தத்தில் சென்னை மாவட்டத்தில் 16,935 ஆண்கள், 17,911 பெண்கள், 20 இதர வாக்காளர்கள் என மொத்தம் 34,866 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள் ளனர். 24,536 ஆண்கள், 24, 415 பெண்கள், 12 இதர வாக்காளர்கள் என மொத்தம் 48,963 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டன. அதன்படி தற்போது 19,09,911 ஆண்கள், 19,65,149 பெண்கள் மற்றும் 1,118 இதர வாக்காளர்கள் என மொத்தம் 38,68,178 வாக்காளர்கள் இடம்பெற்ற வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட் டுள்ளது.
இதில் அதிக பட்சமாக வேளச்சேரி தொகுதியில் 3,07,460 வாக்காளர்களும், குறைந்தபட்சமாக துறைமுகம் தொகுதி யில் 1,70,254 வாக்காளர்களும் இடம் பெற்றுள்ளனர்.
சென்னை மாவட்டத்தில் 3 ஆயி ரத்து 719 வாக்குச்சாவடிகள் உள்ளன. அதிகபட்சமாக பெரம்பூர்தொகுதியில் 284 வாக்குச்சாவடிகளும், குறைந்தபட் சமாக எழும்பூர்தொகுதியில் 169 வாக்குச் சாவடிகளும் அமைந்துள்ளன.
இந்த வரைவு வாக்காளர் பட்டியல் அனைத்து வாக்குச் சாவடி மய்யங் களிலும் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படும். மக்கள் தங்களது பெயர் கள் மற்றும் குடும்பத்தாரின் பெயர்கள் குறித்த விவரங்கள் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனவா என சரிபார்த்துக் கொள்ளலாம்.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும், திருத்தம் மேற்கொள்ளவும் வரும் நவ. 4, 5 மற்றும் 18,19 தேதிகளில் (சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள்) வாக்குச்சாவடி மய்யங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளன.
மேலும், பொதுமக்கள் லீttஜீs://ஸ்ஷீtமீக்ஷீs.மீநீவீ.ரீஷீஸ்.வீஸீ என்ற இணையதளம் மூல மாகவும் தங்களுடைய பெயர்கள் சேர்த்தல், நீக்கம் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ள விண்ணப்பிக்கலாம் என மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.