சென்னை உயர் நீதிமன்றத்திற்கு புதிதாக ஒன்பது நீதிபதிகள்

Viduthalai
1 Min Read

சென்னை, ஜன. 20- சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க 6 வழக்குரைஞர்கள் மற்றும் மூன்று மாவட்ட நீதிபதிகளின் பெயர் களை உச்ச நீதிமன்ற கொலீஜியம் ஒன்றிய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்ட மொத்த நீதிபதிகளின் பணியிடங்கள் 75. இதில் பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜாவுடன் சேர்த்து 52 நீதி பதிகள் மட்டுமே பணியில் உள்ளனர். காலியாக உள்ள 23 நீதிபதிகள் பணியிடங்களை நிரப்பும் வகையில், சென்னை உயர்நீதி மன்ற மூத்த நீதிபதிகள் அடங்கிய கொலீஜியம் 18 பேரை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கக் கோரி உச்ச நீதிமன்ற கொலீஜியத்துக்கு கடந்தாண்டு பரிந்துரை செய்திருந்தது.

இந்நிலையில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான மூத்த நீதிபதிகள் அடங்கிய கொலீஜியம், சென்னை உயர் நீதிமன்ற வழக்குரைஞர்கள் ஆர்.ஜான் சத்யன், வி.லட்சுமி நாராயணன், எல்.சி.விக்டோரியாகவுரி, பி.பி.பாலாஜி, ஆர்.நீலகண்டன், கே.கே.ராமகிருஷ்ணன் ஆகிய 6 பேரை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க ஒன்றிய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. 

இதேபோல் மாவட்ட நீதிபதிகளான பி.வடமலை, ஆர்.கலைமதி, கே.ஜி.திலகவதி ஆகிய 3பேரையும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க ஒன்றிய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *