செய்திச் சுருக்கம்

Viduthalai
1 Min Read

சாதனை

தமிழ்நாட்டில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் மூலம் 7 மாவட்டங்களில் தரிசு நிலங்களில் 100 சதவீதம் நடவு செய்து சாதனை படைக்கப்பட்டுள்ளது. மேலும் இதற் கான நிதியில், 80 சதவீதத்தை கிராமங்களில் பயன்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.

நெறிமுறை

தமிழ்நாட்டில் ஆசிரியர்கள் இடையேயான ஊதிய முரண்பாட்டை சரி செய்வதற்கான வழிகாட்டு நெறி முறைகள் தற்போது வழங்கப்பட்டுள்ளன. அதன்படி பணியில் மூத்தவரின் ஊதிய முரண்பாட்டை சரி செய்ய, சார்ந்த அலுவலர் நிலையிலேயே ஆய்வு செய்து உரிய விதிகளின்படி பரிந்துரை அனுப்ப வேண்டும் என பள்ளிக்கல்வித் துறை தகவல்.

அரசாணை

அரசு ஊழியர்கள் உயர் படிப்புக்கு ஒரு முறை கணிசமான ஊக்கத் தொகை வழங்குவதற்கான அறி விப்பை நிறைவேற்றுவதற்கான வழிகாட்டுதல்களுடன் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தயாராகி

சிவப்பு கோளான செவ்வாய் கோளில் வளி மண்டலத்தை ஆய்வு செய்வதற்காக மங்கள்யான்-2 விண்கலத்தை விண்ணில் செலுத்த இஸ்ரோ தயாராகி வருகிறது என்று விஞ்ஞானிகள் தகவல்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *