கழக மாநில அமைப்புச் செயலாளர் வே.செல்வம் தாயார் மறைவு கழகத் தலைவர் தொலைப்பேசியில் ஆறுதல்

Viduthalai
1 Min Read

 கழக மாநில அமைப்புச் செயலாளர் வே.செல்வம் தாயார் மறைவு

கழகத் தலைவர் தொலைப்பேசியில் ஆறுதல்

அரசகுளம் ஊராட்சி மன்ற மேனாள் தலைவர் தி.வேலுச்சாமி அவர்களின் துணைவியும் நமசிவாயபுரம் இசை நாடக ஆசிரியர் சின்னத்தம்பி வாத்தியார் வெள்ளையம்மாள் ஆகியோரின் மகளும், இசைநாடக ஆசிரியர் என்.எஸ்.வரதராஜன், நாடக கலைஞர்கள் என்.எஸ்.தங்கவேல், என்.எஸ்.கணேசன் ஆகியோரின் சகோதரியும், திராவிடர் கழக மாநில அமைப்புச் செயலாளர் வே.செல்வம், இசைநாடக மிருதங்க ஆசிரியர் டி.வி.ஜெயம், நாடக காண்ட்ராக்டர் டி.வி.முருகன், அறநிலையத்துறை ஓய்வுபெற்ற கா.பத்மா, சே.குருதேவி ஆகியோரின் தாயாருமான வே.கிருஷ்ணவேணி அம்மாள் அவர்கள் சில நாள்கள் வயது முதுமை காரணமாக உடல் நலிவுற்ற நிலையில் இன்று (13-02-2023) திங்கள் கிழமை காலை 10 மணிக்கு மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். இறுதி நிகழ்வு இன்று (13.2.2023) இரவு 9  மணிக்கு நடைபெறுகிறது.

கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி,  துணைத் தலைவர் கவிஞர். கலி.பூங்குன்றன், பொதுச் செய லாளர் வீ.அன்புராஜ் ஆகியோர் தொலைப்பேசியில், ஆறுதலும், இரங்கலும் தெரிவித்தனர்.

இல்ல முகவரி: 18/6 கந்தத்தேவர்சந்து, மேலமாசி வீதி, அய்யப்பன் கோவில் அருகில், மதுரை.

செல்பேசி: 9843346346

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *