மியான்மர், நவ. 20- மியான்மரின் ராணுவப் படைகள் கடந்த 2017 ஆம் ஆண்டு 10,000-க்கும் அதிகமான ரோஹிங்கியா மக்களைக் கொன்றதற்கான ஆதாரம் இருப்பதாக, அய்க்கிய நாடுகள் அமைப்பின் பன்னாட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.
மியான்மர் நாட்டில் ரோஹிங் கியா மக்களுக்கு எதிரான கடந்த 2017 ஆம் ஆண்டு ராணுவப் படைகள் இனப்படுகொலையில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது.
கடந்த பத்தாண்டுகளில் லட்சக் கணக்கான ரோஹிங்கியா மக்கள் மியான்மரை விட்டு வெளியேறி இந்தியா, வங்கதேசம் உள்ளிட்ட அண்டை நாடுகளில் அகதிகளாகத் தஞ்சமடைந்து வருகின்றனர்.
இந்த நிலையில், மியான்மரின் முஸ்லீம்கள் அதிகமுள்ள சிறு பான்மை சமூகத்தினரான ரோஹிங் கியா மக்களுக்கு எதிராக மியான்மர் அரசு மேற்கொண்ட வன்முறைகள் குறித்து நேற்று (நவ. 19) நெதர்லாந்தில் உள்ள பன்னாட்டு நீதிமன்றத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இந்த விசாரணைக் குறித்து நீதிமன்றத் தலைவர் யுஜி இவா சாவா கூறுகையில், “மியான்மர் படைகள் ஆயிரக்கணக்கான ரோஹிங்கியா மக்களைக் கொன்று, பாலியல் வன்முறைகள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான கடுமையான வன்முறைகள் மேற் கொண்டதையும், தப்பியோடிய ரோஹிங்கியா மக்கள் மீது தாக்குதல் நடத்தியதையும் இந்த நீதிமன்றம் கண்டறிந்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, மியான்மர் அரசு இனப்படுகொலை செய்வதாகக் குற்றஞ்சாட்டி அவர்களின் சட்டவிரோத நடவடிக்கைகள் அனைத்தையும் உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டுமென வலியுறுத்தி, கடந்த 2019 ஆம் ஆண்டு காம்பியா நாட்டின் அரசு நீதிமன்ற விசாரணையை முன்மொழிந்தது.
இதையடுத்து, மியான்மர் அரசு ரோஹிங்கியா மக்களுக்கு எதிராக இனப்படுகொலை நடவடிக்கை மேற்கொண்டதா என்பது குறித்த விசாரணையை பன்னாட்டு நீதிமன்றம் தொடங்கியுள்ளது குறிப் பிடத்தக்கது.
ரோஹிங்கியா இனப்படுகொலை! மியான்மருக்கு எதிரான வழக்கை ஏற்றது பன்னாட்டு நீதிமன்றம்
Leave a Comment
