இந்தியாவில் காசநோய் சிகிச்சையில் முன்னேற்றம் : உலக சுகாதார அமைப்பு

1 Min Read
- Advertisement -

ஜெனிவா, நவ. 14- கடந்த 2015-ஆம் ஆண்டை ஒப்பிடுகையில், இந்தியாவில் தற்போது காசநோய் உயிரிழப்புகளின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் குறைந் துள்ளதாக உலக சுகாதார அமைப் பின் (டபிள்யுஹெச்ஓ) அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உலக சுகாதார அமைப்பின் உலகளாவிய காசநோய் அறிக்கை-2026 நேற்று முன்தினம் (12.11.2026) வெளியிடப்பட்டது. அதில், ‘இந்தியாவில் கடந்த 2015-இல் காசநோய் உயிரிழப்பு லட்சத்தில் 28 போ் என்ற அளவில் இருந்தது. இது, 2025-இல் லட்சத்தில் 18 போ் என்ற அளவில் கணிசமாக குறைந்துள்ளது. அதாவது, காசநோய் உயிரிழப்பில் 38 சதவீத குறைவை இந்தியா பதிவு செய்துள்ளது. உலக அளவில் காசநோய் உயிரிழப்பில் ஏற்பட்டுள்ள குறைவைவிட (35%) இது அதிகம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்றிய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘விரைவாக நோய் கண்டறிதல், உரிய நேரத்தில் சிகிச்சை, செயற்கை நுண்ணறிவு (ஏ.அய்.) அடிப்படை யிலான எக்ஸ் ரே, பிற தொழில்நுட்ப புத்தாக்கங்கள், விரிவான மருத்துவ பராமரிப்பு, ஊட்டச்சத்து ஆதரவு உள்ளிட்ட நடவடிக்கைகளின் வாயிலாக காசநோய் இல்லாத தேசத்தை உருவாக்குவதில் இந்தியா முன்னேற்றம் கண்டுள்ளது.

தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தின்கீழ் பல்வேறு வெற்றிகர முன்னெடுப்புகளின் பிரதிபலிப்பே இந்த முன்னேற்றமாகும். காசநோய் சிகிச்சையில் 94 சதவீத வெற்றி விகிதத்தை இந்தியா பதிவு செய் துள்ளது. இது, நோயாளிகளை மய்யப் படுத்திய திறன்மிக்க அணுகுமுறை, வலுவான சிகிச்சை கட்டமைப்பு மற்றும் அரசின் நிலையான ஆதர வுக்கு கிடைத்த பலனாகும்.

பிரதமா் மோடியின் தலை மையின்கீழ் காசநோய்க்கு எதிரான போராட்டம் மக்கள் இயக்கமாக உருவெடுத்துள்ளது. நாட்டில் கடந்த 2024 முதல் இதுவரை 25 கோடி தனிநபா்கள் காசநோய் பரிசோதனை வரம்பில் கொண்டுவரப்பட்டு, சுமார் 11 கோடி பேருக்கு மார்பக எக்ஸ் ரே மேற்கொள்ளப்பட்டது.

இதன் மூலம் 48.64 லட்சம் பேருக்கு காசநோய் பாதிப்பு கண்டறியப்பட்டு, சிகிச்சை தொடங்கப்பட்டது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *