இந்தியாவின் சிறந்த மருத்துவக் கட்டமைப்பை சிதைக்க முயல்கிறதா த.வெ.க. அரசு? மருத்துவ அறிக்கைகள் மற்றும் ஆய்விதழ் வெளியீட்டை நிறுத்தியது தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை

2 Min Read
- Advertisement -

சென்னை, நவ. 14- நோய்ப் பாதிப்புகள், தொற்றுப் பரவல்கள் மற்றும் தாய்-சேய் இறப்பு விகி தங்கள் குறித்த மாதாந்திர அறிக் கைகளை வெளியிடுவதைத் தமிழ்நாடு பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத் துறை நிறுத்தியுள்ளது. அத்துடன், அரசுத் திட்டங்களின் செயல்பாட்டு ஆய்வுகள் மற்றும் தொற்றுநோயியல் ஆராய்ச்சிகளை உள்ளடக்கிய ‘தமிழ்நாடு பொது சுகாதாரம் மற்றும் மருத்துவ ஆராய்ச்சி ஆய்விதழ்’ வெளியிடுவதையும் துறை நிறுத்திக் கொண்டுள்ளது.

இந்த நடவடிக்கை குறித்துப் பொது சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் ஏ.சோமசுந்தரம் கூறுகையில், “ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் உண்மையான நில வரத்தைப் பிரதிபலிப்பதில்லை. சில தொற்றுகள் கோடைக் காலத்திலும், சில குளிர்காலத்திலும் இயல்பாகவே அதிகரிக்கும். இவற்றை முறையாக ஒப்பிடாமல் நோய்த் தொற்றுப் பரவல் என்று கூற முடியாது” என்று தெரிவித்துள்ளார்.

ரேபிஸ் உள்ளிட்ட நோய்கள் மற்றும் ‘மக்களைத் தேடி மருத்துவம்’ போன்ற திட்டங்களின் தாக்கம் குறித்த தகவல்களை வழங்கி வந்த இந்த ஆய்விதழின் கடைசிப் பதிப்பு 2025-ஆம் ஆண்டின் மூன்றாவது தொகுதியாக வெளியானது குறிப்பிடத்தக்கது. மேலும், இயக்குநரகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலிருந்தும் மாதாந்திர அறிக்கைகளுக்கான பகுதி நீக்கப்பட்டுள்ளது.

அரசின் இந்த நடவடிக்கை பொது சுகாதாரத் தகவல்களை மறைப்பதற்குச் சமம் என்று துறை சார்ந்த நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர். மாநில அளவிலான சுகாதாரத் தரவு களைத் தொடர்ந்து வழங்கி வந்த இந்த அறிக்கைகள், நோய்ப் பரவலைக் கண்காணிக்கவும், புதிதாகத் தோன்றும் தொற்று களைக் கண்டறியவும் ஆராய்ச்சி யாளர்கள், மருத்துவர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்குப் பெரிதும் உதவி வந்ததாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இது குறித்து மாநிலத் திட்டக் குழுவின் முன்னாள் உறுப்பினர் டாக்டர் ஜெ. அமலோற்பவநாதன் கூறுகையில், “வழக்கமான, வெளியிடப்பட்ட தரவுகள் இல்லாமல், அரசின் கூற்றுகளைச் சரி பார்ப்பதோ, பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களைக் கண்டறிவதோ அல்லது திட்டங்கள் சிறப்பாகச் செயல்படுகின்றனவா என்பதை மதிப்பிடுவதோ கடினமாகிவிடும். வெளிப்படைத்தன்மை இல்லாதது கண்காணிப்பு மற்றும் பொறுப்புக் கூறலைப் பலவீனப்படுத்துவதோடு, நீண்டகாலமாகப் பொது சுகா தாரத்தில் முன்னோடியாகக் கருதப்படும் மாநிலத்தின் நம்பகத் தன்மையையும் சிதைக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக டெங்கு, இன்ஃப்ளூ யன்ஸா மற்றும் பிற தொற்றுநோய்கள் பரவும் பருவகாலங்களில் மக்களின் நம்பிக்கையைப் பெறுவதற்குத் தரவுகளைத் தொடர்ந்து வெளி யிடுவது அடிப்படையானது என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். எனவே, மாதாந்திர அறிக்கைகள் மற்றும் ஆய்விதழை மீண்டும் வெளியிட வேண்டும் என்றும், தரவு களை உரிய நேரத்தில் அனைவரும் அணுகக்கூடிய வகையில் வழங்க வேண்டும் என்றும் அவர்கள் பொது சுகாதாரத் துறையை வலியுறுத்தியுள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *